என்ன சொல்றீங்க...70 களின் கனவுக்கன்னி சூர்யாவுக்கு ஜோடியா ?

சென்னை : சூர்யா நடித்த ஜெய்பீம் படம் நவம்பர் 2 ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த படம் பாராட்டுக்களை அள்ளி குவித்து வருகிறது.

சமீப நாட்களாக அதிகம் பார்க்கப்பட்ட, அதிகம் பேசப்பட்ட படமாக ஜெய்பீம் இருந்து வருகிறது. IMDb ரேட்டிங்கில் 9.6 பெற்று முதல் இடம் பிடித்துள்ளது ஜெய்பீம். சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சூர்யாவின் இந்த படமும் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

ஒரே நேரத்தில் 2 படங்கள்

ஒரே நேரத்தில் 2 படங்கள்

இதைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த எதற்கும் துணிந்தவன் படத்தின் ஷுட்டிங்கும் நிறைவடைந்து விட்டதாக பாண்டிராஜ் நேற்று அறிவித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் பாலா மற்றும் சிறுத்தை சிவா இயக்கும் படங்களில் சூர்யா நடிக்க போகிறாராம்.

இவர் சூர்யாவுக்கு ஜோடியா

இவர் சூர்யாவுக்கு ஜோடியா

பாலா இயக்கும் படத்தையும் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தான் தயாரிக்க உள்ளது. இதன் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் நடிக்க பாலிவுட் கனவுக்கன்னி ஹேமமாலினியிடம் பேசி வருகிறாராம் பாலா. ஒருவேளை வயதான கேரக்டரில் நடிக்கும் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடிக்க போகிறாரா என தெரியவில்லை. இந்த தகவலை கேட்டு சூர்யா ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

70 களின் கனவுக்கன்னி

70 களின் கனவுக்கன்னி

1960, 70 களில் இந்தி சினிமா உலகை கனவுக்கன்னியாக ஆட்சி செய்தவர் ஹேமா மாலினி. இவர் தமிழில் 1963 ம் ஆண்டு இது சத்தியம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். அதற்கு பிறகு சில, பல மோசமான அனுபவங்களால் அவர் கோலிவுட்டை விட்டு, மும்பை பக்கம் சென்றார். அதற்கு பிறகு தமிழ் சினிமா பக்கமே தலைகாட்டவில்லை அவர்.

சூப்பர் ஹிட் ஹீரோயின்

சூப்பர் ஹிட் ஹீரோயின்

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்தியில் 1968 ம் ஆண்டு சப்னோ கா செளடாகர் படத்தில் ராஜ் கபூருக்கு ஜோடியாக நடித்து பாலிவுட்டிற்குள் என்ட்ரி ஆனார். அங்கு அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஹிட் படங்களில் நடித்து, தற்போது வரை பலரின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார். சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் ஈடுபட்டு, எம்பி.,யாக உள்ளார்.

சம்மதிக்க வைத்த கமல்

சம்மதிக்க வைத்த கமல்

ஹேமா மாலினி பாலிவுட்டில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போது பல முன்னணி ஸ்டார்களுடன் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புக்கள் தேடி வந்தன. ஆனால் அவற்றை ஏற்க ஹேமா மாலினி மறுத்து விட்டார். கிட்டதட்ட 50 ஆண்டுகள் கழித்து, மிகவும் சிரமப்பட்டு, சமாதானம் செய்து ஹே ராம் படத்தில் நடிக்க வைத்தார் கமல்.

முயற்சி செய்யும் பாலா

முயற்சி செய்யும் பாலா

தற்போது கமலை தொடர்ந்து டைரக்டர் பாலா, ஹேமா மாலினியை தமிழில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம். அதுவும் தனது படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக. ஒருவேளை இதற்கு ஹேமா மாலினி ஓகே சொல்லி விட்டால், அதன் பிறகு இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம். மேலும் பல தமிழ் பட வாய்ப்புக்கள் அவருக்கு வரவும் வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X