»   »  பாலாவின் “இளமை கொஞ்சும்” புதிய படம்... சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி ஹீரோயினாக அறிமுகம்!

பாலாவின் “இளமை கொஞ்சும்” புதிய படம்... சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி ஹீரோயினாக அறிமுகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் பாலாவின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முன்னணி நடிகர்கள் பலர் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாட்டைப் பட நாயகன் யுவன் நாயகனாகவும், நாயகியாக சூப்பர் சிங்கர் புகழ் பிரகதியும் நடிக்க உள்ளனர்.

தேசிய விருது பெற்ற திரைப்படங்களை இயக்கிய பாலா, தாரை தப்பட்டை படத்தைத் தொடர்ந்து குற்றப்பரம்பரை குறித்த கதை ஒன்றை படமாக்க திட்டமிட்டார். ஆனால், அப்படம் தொடர்பாக பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே பிரச்சினை உருவானது.

Bala finalizes his next hero and heroine

விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா உள்ளிட்டவர்களைக் கொண்டு இப்படம் தொடங்கவிருப்பதாக பாலா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

புதிய படம்...

ஆனால் சிலப்பல காரணங்களால் அப்படத்துக்கு முன்பாக முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டார் பாலா. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது.

சாட்டை நாயகன்...

இந்நிலையில் தற்போது பாலா படத்தில் நடிக்கவுள்ள நாயகன், நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நாயகனாக சமுத்திரக்கனியின் 'சாட்டை' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த யுவன் நடிக்கிறார்.

பிரகதி...

நாயகியாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பிடித்த பிரகதி நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே தாரை தப்பட்டை படத்தில் பாலாவால் பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்தப் பட்டவர் ஆவார்.

இன்ப அதிர்ச்சி...

இதுதொடர்பாக வார இதழ் ஒன்றிற்கு பிரகதி அளித்துள்ள பேட்டியில், "இயக்குநர் பாலா சார், அவருடைய அடுத்தப் பட கதாநாயகியாக என்னைத் தேர்வு செய்தது பெரிய இன்பதிர்ச்சி. என்னை எப்படித் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு, உன்னை எனக்குப் பிடிக்கும். உன் திறமையை நான் மதிக்கிறேன்.

நடிப்பது சுலபம்...

உனக்குப் பாடுவது சுலபமாக வருகிறது. நடிப்பது அதை விட சுலபம் என்றார். நீ எத்தியோப்பியாவில் பிறந்தாலும் சரி, சோமாலியாவுல பிறந்தாலும் சரி, என் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான முகமா என்று மட்டும்தான் நான் பார்க்கிறேன். மக்களும் அப்படிதான் பார்ப்பார்கள் என்றார்' எனத் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஷூட்டிங்...

நாயகன், நாயகி தவிர இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளமை... புதுமை...

நாயகன் மற்றும் நாயகி என இருவருமே வயதில் மிகவும் இளையவர்கள் என்பதால் இப்படம் நிச்சயம் இளமை கொஞ்சும் காதல் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Director Bala is ready to start his next which will have young hero Yuvan of ‘Saattai’ fame as the hero and Pragathi Guru debuting as the female lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil