»   »  இளையராஜா இசையில் பாலாவின் 'நாச்சியார்'... முதல் டிசைன் ரிலீஸ்!!

இளையராஜா இசையில் பாலாவின் 'நாச்சியார்'... முதல் டிசைன் ரிலீஸ்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலா இயக்கும் புதிய படத்தின் பெயர் நாம் முன்பு அறிவித்தது போலவே நாச்சியார்-தான். படத்தின் முதல் தோற்றப் போஸ்டரையும் இன்று வெளியிட்டுள்ளார் பாலா.

ஒரு போஸ்டரில் ஜோதிகா குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டிருக்க, ஜிவி பிரகாஷ் வேப்பங் குச்சியில் பல் தேய்த்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜோதிகாவுக்கு தம்பியாக நடிக்கிறாராம் ஜிவி இந்தப் படத்தில்.

Bala - Ilaiyaraaja joins for the 5th time

இன்னொரு போஸ்டரில் கோணிப்பை சுற்றிய வலது கையில், அதற்கு மேல் முள் கம்பிகளைச் சுற்றிக் கொண்டு தாக்குதலுக்குத் தயாராகும் ஜோதிகா படம் இடம்பெற்றுள்ளது. நிஜத்தில் வாழ்ந்த ஒரு வீரப் பெண்ணின் கதையாக இந்தப் படம் உருவாகும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்துக்கு இசை இளையராஜா. ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். பாலா - இளையராஜா 5வது முறையாக இந்தப் படத்தில் இணைகிறார்கள். இருவரும் இணைந்து முந்தைய படம் தாரை தப்பட்டையின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது நினைவிருக்கலாம்.

English summary
Bala - Jyothika's new movie Naachiyaar design has been released today.
Please Wait while comments are loading...