»   »  பாலாவிடம் ஆசியுடன் 'வேட்டை நாய்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஆர்கே சுரேஷ்!

பாலாவிடம் ஆசியுடன் 'வேட்டை நாய்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஆர்கே சுரேஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தன் பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலாவிடம் ஆசி பெற்று 'வேட்டை நாய்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை பாலாவை வைத்தே வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் .

இதுவரை தயாரிப்பு, விநியோகம் என்று வேறு வேறு தளங்களில் இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ், இயக்குநர் பாலா மூலம் 'தாரை தப்பட்டை'யில் அறிமுகமான பின் வரிசையாகப் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். வில்லனாக நடித்து வந்தவர், இப்போது நாயகனாகி 'தனி முகம்' , 'பில்லா பாண்டி' , 'வேட்டை நாய்' போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Bala releases Vettai Naai first look

இந்த 'வேட்டை நாய் ' படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று இயக்குநர் பாலா வெளியிட்டிருக்கிறார். நேற்று மே-19 ஆர் கே சுரேஷின் பிறந்த நாள் ஆகும்.

தன்னை சினிமாவுக்கு அறிமுகப் படுத்திய குருநாதர் பாலா ஆசியுடன் வெளியிடப்படுவது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியது என மகிழ்கிறார் சுரேஷ்.

இந்நிகழ்வில் இயக்குநர் ஜெய்சங்கர், ஒளிப்பதிவாளர் எம்.முரளி, வில்லன் நடிகர் விஜய் கார்த்திக் தாய் மூவீஸ் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 'வேட்டை நாய் 'படக் குழுவினரும் கலந்து கொண்டனர்.

Bala releases Vettai Naai first look
English summary
RK Suresh has released the first look of Vettai Naai movie with the blessings of director Bala

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil