மீண்டும் இணையும் பாலா,சூர்யா கூட்டணி.. அதிரடியாய் உருவாகிறது!

சென்னை : நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் தமிழ் சினிமாவை கடந்து தெலுங்கு மலையாளம் இந்தி என பல மொழிகளிலும் கவனத்தைப் பெற்று வர இப்பொழுது சூரரைப்போற்று இந்தியில் ரீமேக் ஆக பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

இயக்குனர் ஞான வேல் இயக்கத்தில் ஜெய் பீம் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் இப்பொழுது சூர்யா நடித்து வருகிறார். இதில் ஜெய்பீம் படத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வழக்கறிஞராக நடித்து சொந்தமாக தயாரித்தும் வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் பாலா அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்க இருக்க அதில் முதல் படம் சூர்யாவின் தயாரிப்பில் அதிரடியாக உருவாகிறது என தெரியவந்துள்ளது.

கமர்சியல் காட்சிகள்

கமர்சியல் காட்சிகள்

இயக்குனர் பாலாவின் திரைப்படங்கள் என்றாலே தேவையில்லாத மசாலாக்கள் மற்றும் கமர்சியல் காட்சிகள் இடம் பெறாது. குறிப்பாக இவரது திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு கச்சிதமாக பொருந்தி இருக்கும் உண்மையான வாழ்வியலை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். இவ்வாறு தனித்துவமான படங்களை இயக்கி இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள பாலாவின் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று குவித்துள்ளது. இதில் சூர்யா பாலாவுடன் இணைந்து நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து இருப்பார். மேலும் அவன் இவன் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் வந்து செல்வார்.

 திருப்புமுனையை

திருப்புமுனையை

சூர்யாவின் ஆரம்பகால திரைப்படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்று வந்த நிலையில் பாலாவின் இயக்கத்தில் நடித்த நந்தா இவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை சாஃப்டான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த சூர்யா நந்தாவில் கட்டுமஸ்தாக உடம்பை ஏற்றி கரடுமுரடான ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மிகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த சூர்யாவிற்கு இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி இப்பொழுது உயர்ந்த நிலையை எட்டியுள்ளார்.

தேசிய விருது

தேசிய விருது

நந்தா வெற்றிக்குப் பிறகு மீண்டும் பாலா சூர்யா கூட்டணி பிதாமகன் திரைப்படத்தில் இணைய இதிலும் கலகலப்பான ஒரு கதாபாத்திரத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தாலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றிருப்பார் இந்த திரைப்படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய திரைப்படங்கள் சூர்யா பாலாவின் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல ஆண்டுகள் இருந்து வந்தன. இதற்கிடையில் ஆர்யா விஷால் நடிப்பில் வெளியான அவன் இவன் திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா தோன்றி இருப்பார்.

வர்மா

வர்மா

எப்பொழுதும் சொந்த கதைகளை இயக்கி வந்த பாலா முதல் முறையாக தெலுங்கில் மெகா ஹிட் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இந்த முடிவை எடுத்திருந்தார். நடிகர் விக்ரமும் பாலாவும் முதல்முறையாக இணைந்த சேது படத்திலிருந்தே மிகச் சிறந்த நண்பர்களாக பழகி வர விக்ரமுக்காக அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் இயக்க பாலா ஒப்புக்கொண்டார். தெலுங்கு ரசிகர்களின் ரசனையில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றது போலவும் அதேசமயம் பாலாவின் படங்களின் சாயலிலேயே அர்ஜுன் ரெட்டி வர்மா என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருந்தது. பட வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் தயாரிப்பு குழு வர்மா படத்தை பார்த்துவிட்டு படம் திருப்தி அளிக்கவில்லை என அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு வேறு ஒரு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் அதே கதையை இரண்டாவது முறையாக இயக்கி வெளியிட்டிருந்தனர்.

 சூர்யா தயாரிப்பில்

சூர்யா தயாரிப்பில்

தமிழ் சினிமாவில் உயரிய இடத்தில் இருந்த பாலாவுக்கு வர்மா திரைப்படம் மிகப்பெரிய சறுக்கல் என்றே சொல்லலாம். வெளிவராது என நினைத்த வர்மா ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் படுமோசமாக கலாய்க்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த பாலா பழைய ஃபார்முக்கு மாறி அதிரடியாக அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்க தயாராக உள்ளார். இதில் முதல் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 பழைய பாலாவாக

பழைய பாலாவாக

நந்தா, பிதாமகன்,அவன் இவன் ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் பாலா சூர்யா கூட்டணியில் இப்படம் உருவாக உள்ளது. மேலும் இதில் ஹீரோவாக நடிகர் அதர்வா நடிக்க இருப்பதாகவும், கதா நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார் என பேச்சுக்கள் அடிபடுகிறது. அதர்வா ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்து மிகச் சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர். இப்பொழுது இரண்டாவது முறையாக பாலாவுடன் இணைகிறார். ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களும் மீண்டும் பழைய இயக்குனர் பாலாவை சினிமாக்களில் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க சூர்யாவின் தயாரிப்பில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் திருச்செந்தூரில் முருகன் துணையுடன் தொடங்க உள்ளது. இதற்கிடையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஜோசப் என்ற படத்தை தமிழில் விசித்திரன் என்ற பெயரில் பாலா தயாரிக்க ஆர்கே சுரேஷ் மற்றும் பூர்ணா லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X