சிம்பு பற்றிய ரகசியத்தை ஓப்பனாக போட்டுடைத்த பாலா...சிம்பு என்ன சொன்னார் தெரியுமா ?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட்டில் வந்த முதல் நாளே சிம்பு பற்றிய ரகசியத்தை பாலா ஓப்பனாக போட்டுடைத்தார். இந்த தகவல் ரசிகர்களை மட்டுமல்ல அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து கமலஹாசன் விலகியதை அடுத்து சிம்பு புதிய ஹோஸ்டாக நேற்று முதல் பொறுப்பேற்றுள்ளார். இது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. பிரபலமான ரியாலிட்டி ஷோவில் வந்துள்ளதால் இனி சிம்புவிற்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

துள்ளி குதித்த போட்டியாளர்கள்
சிம்புவை பார்த்த மகிழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருமே துள்ளி குதித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். பார்வையாளர்களும் சிம்புவை பார்த்த உற்சாகத்தில் அவரிடம் மனம் விட்டு பல கேள்விகள் கேட்டனர். சிம்புவும் ஓப்பனாக பதிலளித்தார். பெண் ரசிகைகளும் சிம்புவிடம் லவ் பண்ணலாமா என கேட்டு அசர வைத்தனர்.

பாலா போட்டுடைத்த சர்ப்ரைஸ்
பிக்பாஸ் அல்டிமேட்டில் கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ், சிம்புவிடம் பேசுகையில் அவர் நடித்த வல்லவன் படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பதாக கூறினார். இந்த தகவல் பார்வையாளர்களை மட்டுமல்ல சிம்புவிற்கும் மிகப் பெரிய சர்ப்ரைசாக இருந்தது. இருந்தாலும் அதை சமாளிப்பதற்காக, நீங்க சொல்வதை பார்த்தால் என்னை ரொம்ப வயதானவர் போல ஆக்குறீங்களே என்றார்.

இனி பல விஷயம் வரும் போலவே
இந்த தகவலை பாலா கூறியதும், வல்லவன் படத்தில் சிம்புவுடன் பாலா நடனமாடிய பாடலை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். சிம்புவுடன் பாலா இருக்கும் போட்டோக்களும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனால் இனி வரும் வாரங்களில் சிம்பு பற்றி இன்னும் பல யாருக்கும் தெரியாத தகவல்கள் வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோட்டை கழற்றி வீசிய பாலா
போட்டியாளர்களை தனியாக சந்தித்து பேசிய போது, சிம்புவை பார்த்த சந்தோஷத்தில் பாலா கோட்டை கழற்றி, சுழற்சி வீசினார். இதை பார்த்து சிம்புவே ஷாக்காகி விட்டார். ஆனால் சிம்பு வந்தால் தான் கோட்டை கழற்றி, சுழற்றுவேன் என பாலா ஏற்கனவே மற்ற ஹவுஸ்மேட்களிடம் கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











