»   »  ஜோதிகா நடிக்கும் 'நாச்சியார்' டீசர் இன்று ரிலீஸ் - வெளியிடுவது இவர்தான்..!

ஜோதிகா நடிக்கும் 'நாச்சியார்' டீசர் இன்று ரிலீஸ் - வெளியிடுவது இவர்தான்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil
'கடைசில ஜோதிகாவையும் கெட்ட வார்த்தை பேச வச்சிட்டாரே பாலா!'- வீடியோ

சென்னை : பாலா இயக்கத்தில், ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடித்துவரும் 'நாச்சியார்' படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது. இந்தத் தகவலை நடிகர் சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரிட் ஜோடி சூர்யா, ஜோதிகா. இவர்கள் இருவரும் திருமணத்திற்குப் பிறகு ஒன்றாக இணைந்து எப்போது நடிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர்.

Bala's Naachiyaar teaser will be released today

ஆனால் இவர்கள் கதை நன்றாக இருந்தால் ஒன்றாக சேர்ந்து நடிக்கத் தயார் என்று கூறிவிட்டு தனித்தனியாக வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர். ஜோதிகா, தனக்கு ஏற்ற வகையிலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

இந்த நிலையில் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் நடித்து வரும் 'நாச்சியார்' படத்தின் டீசர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக இருக்கிறது. இந்த டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்.

'நாச்சியார்' படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். 'நாச்சியார்' படத்தை அடுத்து பாலா, விக்ரம் மகன் துருவ்வை வைத்து 'வர்மா' படத்தை இயக்குகிறார்.

English summary
'Naachiyaar' Teaser will be released on 6.00 PM of this evening. While Jyotika and GV Prakash will be playing the lead directed by Bala. This information was reported by actor Surya on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil