»   »  மீண்டும் விக்ரம்- பாலா கூட்டணி...!

மீண்டும் விக்ரம்- பாலா கூட்டணி...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீண்டும் விக்ரமுடன் இணைந்து புதிய படம் உருவாக்கும் முயற்சியில் உள்ளார் இயக்குநர் பாலா.

விக்ரம் ஒரு நடிகராக தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கப் போராடிக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு தோள்கொடுத்து, சேது என்ற பெரிய ஹிட் படம் தந்தவர் பாலா.

Bala's next with Vikram

அதற்குப் பிறகு இருவரும் இணைந்தது பிதாமகன் படத்தில். இந்தப் படத்துக்காக விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

விக்ரமின் இன்றைய நிலைக்குக் காரணம் சந்தேகமில்லாமல் பாலாதான்.

பிதாமகனுக்குப் பிறகு இருவரும் இணையாமல் இருந்தனர்.

இப்போது மீண்டும் இருவரும் சேர்ந்து படம் பண்ண ஆர்வமாக உள்ளனர்.

அரிமா நம்பி படம் இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடித்து வரும் விக்ரம், அந்தப் படம் முடிந்ததும் பாலா இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம்.

தாரை தப்பட்டை படத்தை முடித்துவிட்ட பாலா சமீபத்தில் விக்ரமைச் சந்தித்து தனது அடுத்த படத்தின் கதாபாத்திரம் குறித்து பேசியிருக்கிறார். முழுக்கதையையும் சொல்லாமல், அப்பாத்திரத்தின் தன்மையை மட்டும் விக்ரமிடம் விளக்கியிருக்கிறார்.

English summary
Reports suggests that Director Bala will be joined with actor Vikram after his Thaarai Thappattai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil