»   »  தாரை தப்பட்டையைத் தொடர்ந்து மல்டி ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பாலா

தாரை தப்பட்டையைத் தொடர்ந்து மல்டி ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பாலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தாரை தப்பட்டை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாலா அடுத்ததாக முன்னணி நடிகர்களைக் கொண்டு ஒரு படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

பரதேசி படத்தைத் தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் தற்போது மும்முரமாக பாலா இறங்கி இருக்கிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.

இப்படம் இயக்குநர் பாரதிராஜாவின் கனவுப் படமான குற்ற பரம்பரை கதையின் மையக்கருவை தழுவி உருவாகலாம் என்று கூறுகின்றனர். சேது, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் விக்ரமுடன் மீண்டும் பாலா கைகோர்க்கலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Bala Teams Up with Multi Stars

வெள்ளையர்கள் ஆட்சியின்போது வாழ்ந்த மரபுப் பழங்குடியினர் பற்றிய படமாக இப்படத்தின் கதை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமர்சகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற அவன் இவன் மற்றும் நான் கடவுள் பாணி வகையில் இப்படத்தினை பாலா எடுக்கவிருக்கிறாராம்.

விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Director Bala Currently Working on Tharai Thappattai with Sasikumar and Varalakshmi. next Bala plans a multi Star Project with Vikram and others.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil