»   »  மாற்று சினிமாவின் பிதாமகன்... கே.பி. குறித்து வசந்தபாலன் புகழாரம்

மாற்று சினிமாவின் பிதாமகன்... கே.பி. குறித்து வசந்தபாலன் புகழாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாற்று சினிமாவின் பிதாமகனாக திகழ்ந்தவர் இயக்குநர் பாலசந்தர் என தனது இரங்கல் செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

உடல் நலக் குறைவால் காலமான இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் உடல்குக்கு தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரில் வர இயலாதவர்கள் சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இயக்குநர் வசந்தபாலன் கே.பாலசந்தர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

மாற்று சினிமாவின் பிதாமகன்...

மாற்று சினிமாவின் பிதாமகன்...

"இயக்குநர் கே. பாலசந்தர் அவர்களின் மரணம் எனக்கு பாடம் கற்றுத்தந்த ஆசிரியனை இழந்தது போல் மனம் தவிக்கிறது. மாற்று சினிமாவின் பிதாமகன். கே பாலசந்தர் உலக சினிமா வரிசை இயக்குநர்களில் ஒருவராக வைத்து போற்றப்பட வேண்டியவர்.

கேன்ஸ் திரைப்பட விழா...

கேன்ஸ் திரைப்பட விழா...

கே பாலசந்தர் அவர்களுடைய திரைப்படங்கள் உலக திரைப்படவிழாக்களில் கலந்து கொள்ள தகுதியான திரைப்படங்கள்.கேன்ஸ் திரைப்படவிழாவில் முதல்பரிசை வெல்ல கூடிய திரைப்படங்கள்.

கே.பி.யின் தைரியம்...

கே.பி.யின் தைரியம்...

சாதிக்கு எதிராகவும் மதங்களுக்கு எதிராகவும் போலியான அரசியலுக்கு எதிராகவும் தன் சாட்டையை பலமாக சுழட்டியவர் கே பாலசந்தர் அவர்கள்.தண்ணீர் தண்ணீர் படத்தை போன்ற அரசியல் படத்தை எடுத்து வெற்றி கண்டவர் கே பாலசந்தர் அவர்கள்.. அந்த தைரியம் தான் பாலசந்தர்.

தப்பு தாளங்கள்... அபூர்வ ராகங்கள்

தப்பு தாளங்கள்... அபூர்வ ராகங்கள்

விபசாரிகளின் வாழ்வில் உள்ள அழகியலை நம் முன் துணிச்சலாக வைத்தவர் கே பாலசந்தர்......தப்பு தாளங்கள்.. இன்றைக்கு கூட எடுக்க துணியமுடியாத கதையை அன்றைக்கே அழகுணர்ச்சியுடன் இசையாக பதிவு செய்தவர் கே பாலசந்தர் அவர்கள் - அபூர்வ ராகங்கள்..

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை...

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை...

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை 1970களிலே நம் முன் கருப்பு வெள்ளையில் ஓடவிட்ட துணிச்சல் தான் கே பி...

இருமல் தாத்தா ஒரு உதாரணம்...

இருமல் தாத்தா ஒரு உதாரணம்...

கதாபாத்திரத்தின் தன்மை ஒரு திரைக்கதை எழுத மிக முக்கியம். கதாநாயகனின் கேரக்டர்சேஷன் என்ன என்று அனைவரும் கேள்வி கேட்பார்கள்...இன்று அனைவரும பேசுகிற கேரக்டர்சேஷனை படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உருவாக்கிய மேதை கே பி .......இருமல் தாத்தாவில் தொடங்கி ஆயிரம் உதாரணம் சொல்லலாம்.

நூற்றுக்கு நூறு...

நூற்றுக்கு நூறு...

நூற்றுக்கு நூ று திரைப்படத்தை ஒரு திரில்லராக எடுத்து வெற்றி கண்டவர் கேபி.. இன்று அனைவரும பேசுகிறார்கள்.பாடலுக்குள் ஒரு கான்செப்ட் வைக்கவேண்டும் என்று அதை அன்றே செய்து காட்டியவர் கேபி..

உதாரணம்...

1.சிப்பி இருக்குது முத்து இருக்குது...

2.சங்கீத ஸ்வரங்கள்...

3.ஹலோ மைடியர் ராங்நம்பர்...

4.கடவுள் அமைத்துவைத்த மேடை...

வலிமையான நாயகிகள்...

வலிமையான நாயகிகள்...

கதாநாயகிகளுக்கு இன்று சினிமாவில் காட்சிகளை இல்லை...கதாபாத்திரத்திற்கு வலிமை இல்லை கேபியின் கதாநாயகிகள் மிக வலிமையான பெண்கள்...வல்லமை பொருந்தியவர்கள் கதாநாயகர்களை விட கதாநாயக பிம்பத்திற்குள் ஒளிந்து கொண்டவர் அல்ல கேபி, ஆண்மை பொருந்திய இயக்குனர் கேபி, என்றும் அழிக்க முடியாத பலம் கேபி.

இயக்குநர்கள் என்ற ஜாதி...

இயக்குநர்கள் என்ற ஜாதி...

கதாநாயக பிம்பத்திற்குள் வழிபாட்டின் தளமாக இருந்த சினிமா இண்டஸ்ரிக்குள், ஸ்டுடியோவில் வேலை செய்பவர் உண்டு, கொத்தடிமைகளாய் கதை இலாகா உண்டு, இயக்குநர்கள் அடிமையாக ஸ்டுடியோவில் இருந்த காலம் அது ....கதாநாயகர்களுக்கு மரியாதை உண்டு..தயாரிப்பு நிறுவனங்கள் கோலோச்சிய காலம் அது...அன்று இயக்குநர்கள் என்றொரு ஜாதி உண்டு, அதற்கென்று தனியொரு முகம் உண்டு, குணம் உண்டு என்று உருவாக்கிக் காட்டியவர் இயக்குநர் சிகரம் கேபி...

செண்டிமெண்ட்...

செண்டிமெண்ட்...

சினிமாவில் பல சென்டிமெண்டுகள் உண்டு,, முதல் காட்சியில் வெற்றி வெற்றியென கதாநாயகன் கத்தி கொண்டே வரவேண்டும் அல்லது கதாநாயகி ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று சொல்லவேண்டும்...

டைட்டில் நம்பிக்கை...

டைட்டில் நம்பிக்கை...

டைட்டில் நம்பிக்கை கொண்டதாக இருக்கவேண்டும். அறச் சொல் இடம்பெறாத பாடல்வரிகள் வேண்டும் என்று இருந்த சினிமாவிற்குள் தன் முதல் பட டைட்டிலை ‘நீர்க்குமிழி' என்று வைத்து வெற்றி கண்டவர் கேபி.

ஒரு வீடு இரு வாசல்...

ஒரு வீடு இரு வாசல்...

ஒரு திரைப்படத்தில் முதல் பாதி ஒரு கதை இரண்டாம் பாதி ஒரு கதை என்ற புதுமையை புகுத்தியவர் கேபி...ஒரு வீடு இரு வாசல்..

தலைப்பில் கவிதை...

தலைப்பில் கவிதை...

கேபி அவர்களுடை படத்தலைப்பு ஒரு கவிதை அதற்குள் கதை ஒளிந்திருக்கும்....இருகோடுகள், பாமாவிஜயம், சிந்து பைரவி, அவள் ஒரு தொடர்கதை, ஜாதிமல்லி, நிழல் நிஜமாகிறது, கையளவுமனசு.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
In his condolence message to Balachander, director Vasanthabalan has said that Balachander is the person who redefined tamil cinema.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil