»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திறமையான படைப்பாளிகளாக இருந்தால், ராமாயணம் போன்ற இதிகாசங்களை 100நிமிடத்தில் படமாக எடுத்து விட முடியும் என பிரபல திரைப்பட இயக்குனர்கே.பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

பாலச்சந்தருக்கு சொந்தமான டி.வி. நிகழ்ச்சிகள் தயாரிப்பு நிறுவனம் மின் பிம்பங்கள்.இந்த நிறுவனம் ராஜ் டிவியில் 5 நாட்களுக்கு ஒரு கதை என்ற ரீதியில், டி.வி தொடரைதயாரித்து வழங்குகிறது. இதன் தொடக்க விழா சென்னையில் திங்கள் கிழமை நடந்தது.

நிகழ்ச்சியில், பாலச்சந்தர் பேசுகையில், நான் நாடகம் மூலம் சினிமாவிற்கு வந்தவன்.டிவி தொடர்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறேன். எதிர்பார்த்ததை விட எனதுசின்னத்திரை தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

டி.வி. ரசிகர்களை கவர புது புது முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. எங்களதுமின்பிம்பங்கள் நிறுவனம் மூலம் ராஜ் டிவியில் வாரம் ஒரு கதை என்ற மினிதொடர்களை தயாரிக்கவிருக்கிறது.

மெகா சீரீயல்களின் கதைகள் மிகவும் தொய்வாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள். இந்த புதிய தொடரில் கதைகள் தொய்வின்றி விறுவிறுப்பாக இருக்கும்.இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

ராமாயண இதிகாசம் மிகப் பெரியது. ஆனால் என்னால் அதை விறுவிறுப்புகுறையாமல் 100 நிமிடங்களில் அளிக்க முடியும். என்னால் மட்டுமல்ல எந்த சிறந்தபடைப்பாளியாலும் அது முடியும் என்றார் அவர்.

Please Wait while comments are loading...