twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிறுபுத்தி உள்ள ஆள்.. இந்த மனுஷன் முகத்துலேயே முழிக்க மாட்டேன்.. ஆரி மீது விஷத்தை கக்கிய பாலாஜி!

    |

    சென்னை: சிறுபுத்தி உள்ள ஆள் என மீண்டும் மீண்டும் சக ஹவுஸ்மேட்ஸிடம் ஆரி குறித்து தரக்குறைவாக பேசினார் பாலாஜி.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை ஆரி வாங்கிடவே கூடாது என்று அவரை முழுக்க முழுக்க டேமேஜ் செய்து வருகிறார் பாலாஜி.

    போதா குறைக்கு மற்ற ஹவுஸ்மேட்ஸையும் ஆரிக்கு எதிராய் தூண்டி விட்டுவருகிறார் பாலாஜி.

    சிறுபுத்தி உள்ள ஆள்

    சிறுபுத்தி உள்ள ஆள்

    இந்நிலையில், நேற்றைய எபிசோடில் ஆரியிடம் சண்டை போட்ட பிறகு கார்டன் ஏரியாவில் ஆஜித் மற்றும் ஷிவானியிடம் பேசினார் பாலாஜி. அப்போது சிறுபுத்தி உள்ள ஆள் அவர். யாரும் நல்லாருக்க கூடாது. யாருமே நல்லா இருக்கக்கூடாது.

    முகத்துல முழிக்கவே மாட்டேன்

    முகத்துல முழிக்கவே மாட்டேன்

    யாரும் நல்ல பேரு வாங்கக்கூடாது. எனக்கு அந்த ஆள பார்க்கும் போதெல்லாம் வயித்தெரிச்சலா இருக்கு இவரு மட்டும்தான் நல்ல பேரு வாங்கணும்.. வெளியே போனா இந்த மனுஷன் முகத்துல முழிக்கவே மாட்டேன்.

    வொர்த் இல்ல..

    வொர்த் இல்ல..

    இன்டெர்நெட்டுல கூட இந்த மனுஷன் முகத்த பார்க்க மாட்டேன் என்று கும்பிடு போட்டார். மேலும் அவரை பத்தி பேசுறது வேஸ்ட்.. அந்த அளவுக்கு வொர்த் இல்ல, என்று ஆரியை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ பேசினார்.

    கழுவி ஊற்றும் ரசிகர்கள்

    கழுவி ஊற்றும் ரசிகர்கள்

    ஆரி டைட்டில் வின்னர் ஆகக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே அவரை கேவலப்படுத்தி வருகிறார் பாலாஜி. பாலாஜியின் பிளானை புரிந்த ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

    2 நாட்களாக ட்ரெண்டிங்

    2 நாட்களாக ட்ரெண்டிங்

    பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக #RedCardForBalaji என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.

    English summary
    Balaji again insulted Aari. He said I will not see Aari's face in internet also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X