For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி!

  |

  சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்து கொண்ட சம்பவம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

  பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடு ரசிகர்களின் பிபியை எகிற வைத்தது. தனிமையில் ஆரி தன்னிடம் நம்பி கூறிய விஷயத்தை அனைத்து ஹவுஸ்மெட்ஸ் முன்னிலையிலும் சொல்லி அவரை அசிங்கப்படுத்தினார்.

  அதாவது கேப்டன் டாஸ்க்கில் ரியோவுக்கு விட்டுக்கொடுத்ததாக ஆரி கூறியதை மற்றவர்களுக்கு முன்பு சொல்லி கேவலப்படுத்தி விட்டார்.

  ரிலேஷன்ஷிப்ப வச்சு குடும்பமா விளையாட பாக்குறாங்க.. நான் விடமாட்டேன்.. சபதம் எடுத்த பாலா!

  துண்டிவிட்ட பாலாஜி

  துண்டிவிட்ட பாலாஜி

  மேலும் ஆரியை நேர்மையில்லை என்றும் மாற்றி மாற்றி பேசுகிறார் என்றும் கூறி ஹவுஸ்மேட்ஸை தூண்டி விட்டார்.

  இதனால் பிக்பாஸ் வீடே ரணகளமானது. தொடர்ந்து, பாத்ரூமுக்கு சென்ற பாலாஜி கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த சம்யுக்தா, ரம்யா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரிடம் மாஸ்க் போட்டு வாங்க கிழிச்சுட்டு போங்க என ஆரியை கிண்டலடித்தார்.

  மாட்டிக் கொண்டார்

  மாட்டிக் கொண்டார்

  மேலும் அவர் ஆரம்பத்தில் இருந்தே இப்படிதான் மாறி மாறி பேசுகிறார். இதுவரை ஒன் டூ ஒன்னாக இருந்தது. அதனால் தப்பித்துவிட்டார். ஆனால் இம்முறை எல்லாரும் கேட்டதால் மாட்டிக் கொண்டார் என்றார். அதற்கு சம்யுக்தாவும் கவுண்டர் கொடுத்தார்.

  நீங்கள் சொல்லக்கூடாது

  நீங்கள் சொல்லக்கூடாது

  அப்போது அங்கு வந்த ஆரி ஏன்டா அதையே பேசிக் கொண்டிருக்கிறாய் என்றார். என்னை பேசக்கூடாது என்றெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது என்றார். மேலும் என்னை கிழிச்சுறுவேன் என்றார் அதெல்லாம் டிவியில் வரவில்லை.

  கேமரா அட்டேன்ஷன்

  கேமரா அட்டேன்ஷன்

  அதை கமல் சாரிடம் பெருந்தன்மையாக நான் சொல்லவில்லை. அவராக சொல்லி மன்னிப்பு கேட்கனும் கேட்கவில்லை. சம்யுக்தா விஷயத்தில் மட்டும் கமல் சார் ஷோவில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்னு சொல்றீங்க. கேமரா அட்டேன்ஷனுக்காக பண்றீங்க என்றார்.

  தறுதலை என்றதுபோல்

  தறுதலை என்றதுபோல்

  அதற்கு ஆமாம்பா அப்படியே வச்சுக்கோ என்றார் ஆரி. இதனை தொடர்ந்து ரமேஷிடம், கவுண்டவுன் ஸ்டார்ட் என்று கூறியது தன்னை காயப்படுத்தியதாக பேசினார் ஆரி. அப்போதும் குறுக்கிட்ட பாலாஜி, சம்யுக்தாவை உன்னை தறுதலை என்று சொன்னது போல் என அடுத்தடுத்து சத்தமாக சொல்லி சொல்லி மீண்டும் ஆரியை சீண்டினார்.

  கையை நீட்டி பேசாதீங்க

  கையை நீட்டி பேசாதீங்க

  அதற்கு என்னைப் பற்றி எதற்கு நீ பேசுகிறாய் என்று ஆரி கேட்க கையை நீட்டி பேசாதீங்க, கையை இறக்குங்க, இறக்குங்க, வாய்ஸை ரைஸ் பண்ணாதீங்க குறைங்க என ரொம்பவே ரூடாக பேசினார். நீ கை நீட்டி பேசாதே என ஆரி சொல்ல நான் வேற எதையாவது நீட்டி பேசுவேன் என்றார்.

  அசிங்கமாயிடும்

  அசிங்கமாயிடும்

  அதற்கு நீ ஆம்பளையா இருந்து பண்ணிப்பார் என்று ஆரி சொல்ல, சோறுதான திங்கிறீங்க, உப்பு போட்டு தான திங்கிறீங்க நானும் அதைத்தான் திங்கிறேன். என் உடம்புலேயும் ரத்தம்தான் ஓடுது. அசிங்கமாயிடும், வயசுக்கு கூட மரியாதை கிடைக்காது என கேவலமாக பேசினார் பாலாஜி.

  அட்ஜெஸ்ட்மென்ட்

  அட்ஜெஸ்ட்மென்ட்

  பாலாஜியின் கேவலமான பிஹேவிங்கும் பாடி லாங்குவேஜும் பார்க்க சகிக்கவில்லை. ஏற்கனவே சனம் ஷெட்டியை, அட்ஜெஸ்ட்மென்ட் செய்து அழகிப்பட்டத்தை வென்றார் என்றார். மேலும் அவரை தறுதலை என்றதோடு அவளே இவளே என்றும் தரக்குறைவாக பேசினார்.

  தரம் தாழ்ந்து பேசி

  தரம் தாழ்ந்து பேசி

  அப்போதே பாலாஜியை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை கமல்ஹாசனோ அல்லது நிகழ்ச்சி குழுவோ கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது தரம் தாழ்ந்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பாலாஜி.

  English summary
  Balaji behaving and attitude towards Aari in yesterday episode was worst. Balaji was using degrading words on Aari.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X