»   »  வதந்தியை அடுத்து சாதி பிரச்சனையில் சிக்கிய 'தாடி பாலாஜி': அடுத்தடுத்து சிக்குறாரே!

வதந்தியை அடுத்து சாதி பிரச்சனையில் சிக்கிய 'தாடி பாலாஜி': அடுத்தடுத்து சிக்குறாரே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வதந்தி பிரச்சனையை அடுத்து ஜாதி பிரச்சனையில் சிக்கியுள்ளார் நடிகர் தாடி பாலாஜி.

பெரிய திரை மற்றும் சின்னத் திரையில் நடித்து வருபவர் தாடி பாலாஜி. பெரிய திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் உள்ளட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.


சின்னத்திரையில் சீரியல்களில் நடிப்பதுடன் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.


மனைவி

மனைவி

பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கம் அண்மை காலமாகவே பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில் பாலாஜி தன்னை சாதி பெயரைச் சொல்லி திட்டி, அடிப்பதாக நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


டிவி நிகழ்ச்சி

டிவி நிகழ்ச்சி

விஜய் டிவியில் நடந்த நடன நிகழ்ச்சியின்போது பாலாஜிக்கும், நித்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் நித்யா பாலாஜி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.


தற்கொலை

தற்கொலை

தாடி பாலாஜி ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிவிடுகிறார் இல்லை வதந்திகளுக்கு ஆளாகிறார். முன்னதாக இயக்குனர் பாலாஜி யாதவ் தற்கொலை செய்தபோது தாடி பாலாஜி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி பரவியது.


தூக்க மாத்திரை

தூக்க மாத்திரை

தாடி பாலாஜி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் தீயாக பரவியது. கடைசியில் பாலாஜிக்கு போன் செய்தால் அவரே எடுத்துப் பேசி இன்னும் உயிரோடு தான் இருக்கேன் என்றார்.


English summary
Actor Balaji's wife Nithya has given a complaint against him in the police station accusing him of abusing her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil