Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அப்பாவும் அம்மாவும் சரக்கடிப்பாங்கன்னு பாலாஜி முருகதாஸ் சொன்னதெல்லாம் பொய்யாமே.. வெளுக்கும் சாயம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிஸ்டர் இந்தியா பாலாஜி சொன்ன கதையெல்லாம் பொய்யென சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர் பிரபல மாடலான பாலாஜி முருகதாஸ். பாலாஜி படித்து முடித்ததெல்லாம் சென்னையில்தான்.
கல்லூரி நாட்களில் அவர் மாவட்ட அளவிலான கபடி பிளேயராகவும் வலம் வந்தார். மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்ற பல பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.
அதுக்கு கூட அப்பா வரல.. குடிச்சிட்டு அடிப்பாரு.. அம்மாவும் சரியில்ல.. அழ வச்சிட்டாரு பாலாஜி!

தூங்கும்போது அடிப்பார்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸ், தனது அப்பாவும் அம்மாவும் சேர்ந்து குடிப்பார்கள். குடிபோதையில் அப்பா, மிட் நைட்டில் தூங்கும் போது கேஸ் ட்யூப்பால் அடிப்பார்.

சமைத்து கொடுத்ததில்லை
அந்த நேரத்தில் அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக தெரு தெருவாக ஓடுவேன்.. பதுங்குவேன் என கூறினார். மேலும் அம்மா ஒரு நாளும் சாப்பாடு சமைத்து கொடுத்ததில்லை. லஞ்ச் கூட ஸ்கூலில் மிஸ் வாங்கிக்கொடுப்பபார் என பல விஷயங்களை கூறி அனைவரையும் கலங்க வைத்தார்.

எதுக்கு பிள்ளை பெத்துக்குறீங்க?
பிள்ளையை ஒழுங்கா வளர்க்க தெரியாத நீங்கள் எல்லாம் எதற்கு குழந்தை பெற்றுக்கொள்கிறீர்கள் என்றும் தடாலடியாக கேட்டார். இதனால் ஒரே நாளில் அவருக்கான ஆதரவு பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியேவும் சரி எகிறியது.

வெட்கப்பட வேண்டும்
அதேநேரத்தில் உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் அப்பாவின் அம்மாவைப் பற்றி பேசி இப்படி அவர்களின் மானத்தையே வாங்கிவிட்டாயே என்றும் பலர் கடுமையாக விமர்சித்தனர். அப்படி ஒரு பெற்றோரை நினைத்து நீ வெட்கப்படும் போது உன்னை போன்ற ஒரு மகனை நினைத்து அவர்களும் வெட்கப்பட வேண்டும் என்றும் சாடினர்.

அனைத்தும் பொய்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் பேசிய அனைத்தும் பொய் என்றும், ரொம்பவே மிகைப்படுத்தப்பட்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களின் அனுதாபத்தை சம்பாதிக்கவும் எவிக்ஷன் ஆகாமல் தப்பிக்கவும் தனது சுயநலத்துக்காக தன்னுடைய பெற்றோரை பலி கொடுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பயிற்சியாளர்
பாலாஜி முருகதாஸ் பேசியதை பார்த்த இந்த நபர், அவர் குறித்த உண்மையை புட்டு புட்டு வைத்துள்ளார். பாலாஜி முருகதாஸ் தனது பெற்றோரைப் பற்றி மிகைப்படுத்தி பொய் சொன்னார். அவர் சென்னையில் ஒரு உயர் தனியார் கல்லூரியில் படிக்கும் அளவுக்கு ஒரு அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தார். அவரது ஜிம் வழிகாட்டியும் பயிற்சியாளரும் சென்னையைச் சேர்ந்த பிரபல பயிற்சியாளர் பிக்லீ ஆவார், ஒரு செஸஷனுக்கு 1000 ரூபாய் கட்டணம் செலுத்தினார் என கூறியுள்ளார்.

நம்பும் படியில்லை
பாலாஜி முருகதாஸ் சென்னையில் உள்ள வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய அப்பா சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஆவார். அவருடைய அம்மா ஒரு இல்லத்தரசி என https://thewikifeed.com/balaji-murugadoss/ இந்த சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியோ பெற்றோரை பற்றி அவர் சொன்னதை நான் நம்ப மாட்டேன் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

வீடியோக்கள் நீக்கம்
மற்றொரு நெட்டிசனான இவர், பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கடந்து வந்த பாதை குறித்து பேசிய பிறகு, அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பல வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. என்ன ரீசனா இருக்கும் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அப்பா அடிக்க கூடாதா?
பாலாஜி முருகதாஸ் சொன்னாரு அவரு 12 ஆம் வகுப்பு படிக்கும் போது அவரு புத்தகத்த அவங்க அப்பா கிழிச்சதுக்கு பாலாஜி அவரோட அப்பாவ அடிச்சாரம்.. ஸோ.. இவரு மட்டும் அவரோட அப்பாவ அடிப்பாராம்.. அவரு அடிச்சது வச்சு இவரு சிம்பத்தி கிரியேட் பண்றாரு.. சொந்த அப்பாவ அடிச்சுட்டு அதை வேற பெருமையா சொல்றான் என சாடியுள்ளார் இந்த நெட்டிசன்.

பெரும் அதிர்ச்சி
தனது பெற்றோரை ஆல்கஹாலிக் என்று கூறிய பாலாஜி முருகதாஸ் சரக்கிலேயே குளிக்கும் போட்டோக்கள் வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் அடப்பாவி என்ன கொடுமைடா இது என தலையில் கையை வைத்துள்ளனர். இந்நிலையில் அவர் சொன்னதெல்லாம் பொய் என்ற தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.