For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அப்போ தறுதலை.. இப்போ தாலியை அறுக்காதே.. மீண்டும் பெண்களிடம் எல்லை மீறி பேசும் பாலாஜி முருகதாஸ்!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் சனம் ஷெட்டியுடன் பாலாஜி சண்டை போட்டது பெறும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பெண் போட்டியாளர்களிடம் எல்லை மீறி பாலாஜி பேசி வருவதாக ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் வெளியே பெரிய வாய்ப்புகள் கிடைக்காத போட்டியாளர்கள் அனைவரையும் மீண்டும் அழைத்து வந்து பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை நடத்தி வருகின்றனர்.

  4வது சீசனில் ரன்னர் அப் ஆன நிலையில், ஹீரோவாகப் போகிறார் பாலாஜி முருகதாஸ் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

  சமந்தாவின் டி-சர்ட்டில் ஆபாச வார்த்தைகள்.. பதறிப்போன ரசிகர்கள்.. குவியும் ட்ரோல்கள்!சமந்தாவின் டி-சர்ட்டில் ஆபாச வார்த்தைகள்.. பதறிப்போன ரசிகர்கள்.. குவியும் ட்ரோல்கள்!

  ஹீரோயினான ஷிவானி

  ஹீரோயினான ஷிவானி

  பிக் பாஸ் சீசன் 4ல் பாலாஜி உடன் நெருக்கமாக பழகி வந்த ஷிவானி நாராயணன் விஜய்சேதுபதி, ஆர்.ஜே. பாலாஜி மற்றும் வெற்றி என மூன்று நடிகர்களுடன் 3 படங்களில் கமீட் ஆகி நடித்து வருகிறார். ரம்யா பாண்டியன், ஆரி, சனம் ஷெட்டி, சம்யுக்தா உள்ளிட்டோர் சினிமாவில் பிசியாகி உள்ள நிலையில், பாலாஜி முருகதாஸ் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நம்பி களம் இறங்கி உள்ளார்.

  ட்ரிக்கர் செய்யும் பாலா

  ட்ரிக்கர் செய்யும் பாலா

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் இருந்ததை போல இல்லாமல் இந்த சீசனில் பாலா கொஞ்சம் மெச்சூரிட்டி உடன் நடந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மற்றவர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் விதமாக ட்ரிக்கர் செய்யும் வேலையை தொடங்கி உள்ளார். பிரஸ் மீட் டாஸ்க்கின் போது வனிதாவுக்கு எதிராக மற்ற போட்டியாளர்களை ட்ரிக்கர் செய்து விட்டார் பாலாஜி முருகதாஸ்.

  தாலி அறுக்கிறாய்

  தாலி அறுக்கிறாய்

  முதல் சீசனில் பார்த்த ஜூலியாக தான் தற்போது இல்லை என்றும் மெச்சூரிட்டி லெவல் கொஞ்சம் அதிகரித்துள்ளது என பேசி பலரது பாராட்டுக்களையும் ஓட்டுக்களையும் அள்ளி உள்ள ஜூலி பாட்டு பாடிக்கொண்டிருக்க மிகக்கேவலாமாக போ அந்தப்பக்கம் எனச் சொல்லி ஒரு கீச்சுக்குரலில் பாட்டு வேற தாலி அறுக்கிறாய் என திட்டியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

  தட்டிக் கேட்ட தாமரை

  தட்டிக் கேட்ட தாமரை

  ஜூலியை பார்த்து அப்படியொரு தகாத வார்த்தையை சொன்ன பாலாஜி முருகதாஸை தாமரை தாலி அறுக்கிறாய் எனச் சொல்லக்கூடாது என கண்டித்தார். மீண்டும் பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு எதிராக வரம்புமீறி பாலா பேச ஆரம்பித்து விட்டார் என நெட்டிசன்கள் அவரை கண்டித்து வருகின்றனர்.

  அபிராமியுடன் கோர்த்து விட்டு

  அபிராமியுடன் கோர்த்து விட்டு

  தாடி பாலாஜி பிரஸ்மீட்டில் அமர்ந்திருக்க அவரை பார்த்து பாலாஜி முருகதாஸ் போனதடவை உங்க மனைவியுடன் வந்தீங்க இந்த முறை இவர்களோடு வந்துள்ளீர்கள் என அபிராமி அமர்ந்துள்ள பகுதியை கைகாட்டி பேச அதற்கு சுருதி ஆட்சேபம் தெரிவிக்க நான் அப்படி சொல்லவில்லை எனச் சொல்லி சமாளித்தார். அபிராமியும் பாலாஜியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது.

  Recommended Video

  Pavani Instagram-கு Abhinay அனுப்பிய? உண்மை உடைத்த Balaji Murugadoss | BB Ultimate Thamarai Selvi
  சனம் ஷெட்டியுடன் சண்டை

  சனம் ஷெட்டியுடன் சண்டை

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் சனம் ஷெட்டியிடம் தறுதலைக்கு அர்த்தம் தெரியுமா? எனக் கேட்க.. அவர் தெரியாது என சொல்ல அது நீதான் என பாலா சொன்னது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், சனம் ஷெட்டி அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தான் அழகிப் பட்டம் வென்றார் என பாலா கடிதத்தில் எழுதியதில் புரமோவில் போட்டுவிட்டு பின்னர் அவரை காப்பாற்ற விஜய் டிவி டெலிட் செய்து விட்டது. ஆனால், தற்போது 24 மணி நேரம் டெலிகாஸ்ட் செய்யப்படுவதால், பாலா ஏகப்பட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் கூறி வருகின்றனர்.

  English summary
  Balaji Murugadoss again dominating female contestant with abusive words shocks Bigg Boss Ultimate fans. He fought with Julie and using some abusive words to her.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X