For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சோம்பேறின்னு இன்னொரு வார்த்தை சொன்னீங்கன்னு வச்சிக்கோங்க.. ஜெயிலில் ஆரியை பார்த்து கத்தும் பாலா!

  |

  சென்னை: பாலாவை ஆரி வொர்ஸ்ட் பர்ஃபார்மராக நாமினேட் செய்ததும் வெடித்த சண்டை முதல் புரமோவில் இடம்பெற்ற நிலையில், இரண்டாவது புரமோவில் இருவரும் கண்ணாடி சிறையில் அடைப்பட்டு கிடக்கின்றனர்.

  இந்த வாரம் எப்படி டா ஆரியை வொர்ஸ்ட் பர்ஃபார்மர் ஆக்குனீங்க என்கிற கேள்வி தான் அனைவருக்கும் எழுகிறது.

  மேலும், பாலா சொன்னது போல கடலை சாப்பிடுறவங்க வெளிய ஹாயா இருக்கும்போது, பாலாவையும் ஆரியையும் உள்ளே அனுப்பியது டி.ஆர்.பியை எகிற வைக்கத்தான் என்பது தெளிவாக தெரிகிறது.

  வொர்ஸ்ட் பர்ஃபார்மர்

  வொர்ஸ்ட் பர்ஃபார்மர்

  இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வொர்ஸ்ட் பர்ஃபார்மராக ஆரியையும் பாலாவையும் ஹவுஸ்மேட்கள் நாமினேட் செய்துள்ளனர். அன்பு கேங் 3 பேரும் ஆரியையும் பாலாவையும் நாமினேட் செய்தாலே போதும், ஆஜீத், ஷிவானி, ரம்யா ஆரியை நாமினேட் செய்து உள்ளே அனுப்பி இருப்பார்கள்.

  சிறைக்குள் கேப்டன்

  சிறைக்குள் கேப்டன்

  இந்த வாரம் ஆரியை நாமினேட் செய்து வெளியே அனுப்ப முடியவில்லையே என்கிற காண்டு ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களுக்கும் இருக்கத்தான் செய்யும். அதிலும், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆரியை புகழ்ந்ததை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிந்திருக்காது. ரியோ ஏற்கனவே சோமையும் கேபியையும் பிரைன் வாஷ் பண்ண நிலையில், நேற்று பாலா ஆஜீத்தையும், ஷிவானியையும் ஆரிக்கு எதிராக திருப்பினார்.

  கமல் கேட்பாரா

  கமல் கேட்பாரா

  இந்த வாரம் அப்படி ஷிவானியும் ஆஜீத்தும் அப்படி என்ன சுவாரஸ்யம் செய்து விட்டார்கள் என இந்த முறையாவது கமல் கேட்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆஜீத் குடும்பத்தாரே, மூன்று நாட்களில் பெட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு வா என முகத்துக்கு நேராகவே சொல்லி சென்றனர். ஷிவானி அம்மா பேசிய பேச்சுக்கு ஷிவானியையும் ஆஜீத்தையும் தான் சிறைக்குள் அடைத்திருக்க வேண்டும்.

  சிறைக்குள்ளும் சண்டை

  சிறைக்குள்ளும் சண்டை

  வொர்ஸ்ட் பர்ஃபார்மர் என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் நாமினேட் பண்ணி அனுப்பிய நிலையில், சிறைக்குள் சென்றும் பாலாவும் ஆரியையும் தொடர்ந்து சண்டை போடுவது ரசிகர்களுக்கு நியூ இயர் அதுவுமா பயங்கர எரிச்சலை தருகிறது. என்ன பண்றது இருவரும் தான் டிஆர்பி கன்டென்ட்.

  சோம்பேறி பாலா

  சோம்பேறி பாலா

  டுபாக்கூர் பாலாஜியில் ஆரம்பித்து, பயில்வான் பாலா, லிப்ஸ்டிக் பாலா, பாலா மிதுன், ரொமாண்டிக் ஹீரோ, ஹேண்ட்ஸம் பாலா, நல்லவன் பாலா என ஏகப்பட்ட பெயர்கள் இந்த சீசனில் பாலாஜி முருகதாஸுக்கு கிடைத்த நிலையில், இப்போ புதுசா சோம்பேறி பாலா என்கிற புதிய டைட்டிலை ஆரி கொடுத்திருக்கிறார். குனிந்து நிமிர்ந்து கூட்ட தெரியாது, நீயெல்லாம் பேசுற என ஆரி வெளுத்து வாங்கி உள்ளார்.

  வெறி ஏறிய பாலா

  வெறி ஏறிய பாலா

  கூட்ட முடியாது, முடியாது, முடியாது என மீண்டும் மீண்டும் குரலை உயர்த்தி கத்த தொடங்கும் பாலாவின் அட்டகாசமான காட்சிகள் நிறைந்து புரமோ பரபரப்பை கிளப்பி இருக்கிறது. சோம்பேறின்னு இன்னொரு வார்த்தை சொன்னீங்கன்னு வச்சிக்கோங்க என ஆரியை முறைக்க, உன்னவிட குனிந்து நிமிர்ந்து வேலை செஞ்சிருக்கேன், வறியா என் கூட ஆரி பதிலுக்கு கேட்டதும், பாலா சட்டென வேற டாப்பிக்குக்கு சென்றதை பார்த்து நெட்டிசன்கள் சிரித்து வருகின்றனர்.

  ஹானஸ்ட்டா விளையாடிருக்கேன்

  ஹானஸ்ட்டா விளையாடிருக்கேன்

  இன்னொரு வார்த்தை சொன்னீங்கன்னு வச்சிக்கோங்க என முறைத்த பாலா, பட்டென பெட்டிப் பாம்பாக மாறி கண்களில் கண்ணீருடன், ஒரு இடத்திலும் பொய் சொல்லாமல் ஹானஸ்ட்டா விளையாடிட்டு இருக்கேன் என்றதும், அதே ஹானஸ்ட்டோடு தான் விளையாடுறேன் என சூப்பர் கூலாக பதில் சொல்லி பாலாவை நல்லாவே சூடாக்கி விடுகிறார் ஆரி.

  சோம்பேறி கிடையாது

  சோம்பேறி கிடையாது

  நான் போட்ட உழைப்பு எனக்குத் தான் தெரியும். இந்த வீட்ல யாரும் சோம்பேறி கிடையாது. எல்லாரும் உழைப்பை சிந்திக்கிட்டு இருக்கோம் என அப்படியே பிளேட்டை திருப்பி ஆரி ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களையும் சொன்னது போல மாற்றப் பார்க்கிறார். ரியோவும் பாலாவும் ஆரியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்வது தெரிகிறது. பிக் பாஸ் யாரை வீட்டுக்கு அனுப்ப போறார் என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.

  English summary
  Bigg Boss housemates nominates Aari and Balaji Murugadoss for worst performer and send them to jail. They continued their quarrel fight inside the glass jail.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X