For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆரி எப்படி முதலில் சேவ் ஆகிறார்.. புலம்பித் தள்ளும் பாலா, ரியோ, ஆஜீத்.. வைரலாகும் அன்சீன்!

  |

  சென்னை: பிக் பாஸ் வீட்டின் சிசிடிவி கேமராவாக செயல்பட்டு வரும் நடிகர் ஆரி எப்படி வாரம் வாரம் முதல் ஆளாக சேவ் ஆகிறார் என பாலா மற்ற ஹவுஸ்மேட்களிடம் புலம்பும் அன்சீன் வைரலாகி வருகிறது.

  ஏற்கனவே பாலாஜி முருகதாஸ் ஆஜீத், ரம்யா பாண்டியனிடம் ஆரி குறித்து பேசி இருந்தார்.

  ஆரி இருக்கும் வரை தனக்கு டைட்டில் கிடைக்காது என்பதால், அவரை வெளியேற்ற மறைமுகமாக மத்த ஹவுஸ்மேட்களை தூண்டி வருகிறார் பாலா. ரியோவுக்கும் அதே எண்ணம் தான்.

  என்ன வில்லங்கமோ? கேப்டன் டாஸ்க்கில் வெற்றிப் பெற்ற ஆரி.. அர்ச்சனாவுக்கு நேர்ந்தது ஞாபகமிருக்கா?

  டெரர் ஆரி

  டெரர் ஆரி

  பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களுக்கு டெரராக இருக்கும் ஒரே போட்டியாளர் ஆரி அர்ஜுனன் மட்டும் தான். அதனால் தான் ஒவ்வொரு வாரமும் ஆரியை போரிங் போட்டியாளர் என்றும், ஆரியை வெளியேற்ற நாமினேஷனும் செய்து வருகின்றனர். ஆனால், மக்களின் அன்பை பெற்றுள்ள ஆரி ஒவ்வொரு முறையும் முதல் ஆளாக சேவ் ஆகி வருகிறார்.

  புரிந்தும் புரியாமலும்

  புரிந்தும் புரியாமலும்

  ஆரியை வேண்டுமென்றே கீழே இழுக்கிறேன் என பேசி பாலா மன்னிப்பு கேட்ட நிலையில், மீண்டும் மீண்டும் ஆரியை பற்றியே பேசுவது என்ன விதமான மனநிலை என்று தான் தெரியவில்லை. ஒவ்வொரு போட்டியாளரிடமும் தனித் தனியாகவும், கூட்டமாகவும் ஆரி இல்லாத போது அவருக்கு எதிராக பாலா அணி திரட்டி வருகிறார்.

  ரம்யாவிடம் ஆரியை பற்றி

  ரம்யாவிடம் ஆரியை பற்றி

  ரம்யா, ஆஜீத் இருக்கும் போது ஆரியை பற்றி பாலா பேசினார். நாமெல்லாம் அன்ஃபிட் அவர் மட்டும் தான் இந்த வீட்டில் இருக்க தகுதியான ஆள் என்றார். ஆஜீத்தும் ஆரியை பற்றி ஓவராக பேச ஒட்டுமொத்த ரசிகர்களும் புள்ளப் பூச்சிக் கெல்லாம் கொடுக்கு முளைத்து விட்டது என கலாய்த்து தள்ளினர்.

  எப்படி ஆரி மட்டும்

  எப்படி ஆரி மட்டும்

  இந்நிலையில், அன்சீன் காட்சி ஒன்றில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்களிடம் பாலாஜி முருகதாஸ், எப்படி ஆரி மட்டும் வார வாரம் முதலில் சேவ் ஆகிறார் என பேசும் அன்சீன் வீடியோ வைரலாகி வருகிறது. ஷிவானி நாராயணன், ஆஜீத் மற்றும் ரியோ ஆகியோரும் சேர்ந்து கொண்டு ஆரிக்கு எதிராக அந்த வீடியோவில் பேசுகின்றனர்.

  ஷிவானி சில்மிஷம்

  ஷிவானி சில்மிஷம்

  80 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் அழுது புலம்பியே சாதித்து இருந்து வருகிறார் ஷிவானி நாராயணன். இந்நிலையில், ஆரி வெளியே தெரிவதை விட சனம் ஷெட்டி அதிகமாக தெரிந்திருப்பார். அவரை ஏன் எவிக்ட் பண்ணார்கள். ஓ ஃபிராங்கா பேசிட்டேனா என ஷிவானி தனது சில்மிஷப் பேச்சை பேச ரியோ, பாலா கூட்டாக சிரிக்கின்றனர்.

  ரியோவுக்கும் தோணுச்சாம்

  ரியோவுக்கும் தோணுச்சாம்

  எனக்கும் லாஸ்ட் வீக் அப்படித்தான் தோணுச்சு என ரியோவும் பேச, எங்களுக்கே உன்னை ஏன் முதல் ஆளாக கடந்த வாரம் கமல் சேவ் பண்ணார் என்பதே இன்னும் தெரியாமல் இருக்கு, என ஆரியின் ஆர்மியினர் கலாய்த்து வருகின்றனர். கேள்வி கேட்டா அந்த நபரை குத்தமாக பார்க்கிறார்கள் என்று சொல்வதை விட ஆரியின் பலம் அறிந்து அவரை வெளியேற்ற இப்படி துடிக்கின்றனர் என்பது புரிகிறது.

  அன்சீனில் ஏன்

  அன்சீனில் ஏன்

  இந்த காட்சியையும் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைக்காமல் அன்சீனில் வைத்துள்ளார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் நிச்சயம் ஆரிக்கு டைட்டிலை தர மாட்டார்கள் என்றும், அவரை வெளியே எப்படி அனுப்புவது என்கிற யோசனையில் ஆரி செய்யும் நல்ல விஷயங்களை மறைத்து, ஆரி கோபப்படுவதை மட்டுமே காட்டுகின்றனர் என்றும், ரியோவை ரொம்பவே காப்பாற்றுகின்றனர் என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

  நாளைக்கு லீக்காகிடும்

  நாளைக்கு லீக்காகிடும்

  இந்த வாரம் யார் வெளியே போகிறார் என்பது நிச்சயம் நாளைக்கு லீக் ஆகிடும் என்றும், ஆஜீத், ஷிவானி அல்லது அனிதா ஆகிய மூவர் தான் டேஞ்சர் ஸோனில் உள்ளனர் என்றும், கேபியை அனுப்பினாலும் அனுப்பி விடுவார்கள் அல்லது மாஸ்டர் ஸ்ட்ரோக் வைத்து ஆரியை வெளியே அனுப்பினால், நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

  English summary
  Housemates can’t even digest Aari first getting save every week. Balaji Murugadoss, Rio Raj, Aajeedh and Shivani Narayanan talks and passing coments about Aari is shown in unseen.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X