For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உலக மகா நடிப்புடா சாமி.. நேத்து அப்படி பேசிட்டு இன்னைக்கு மன்னிப்பு கேட்கும் பாலா.. நம்பலாமா!

  |

  சென்னை: ஆரி அர்ஜுனாவை பற்றி நேற்று தான் ரம்யா மற்றும் ஆஜீத்திடம் அப்படி புரணி பேசிய பாலா, இன்றைய மூன்றாவது புரமோவில் மன்னிப்பு கேட்கும் காட்சிகள் பரபரப்பை கிளப்பி உள்ளன.

  பாலாஜி முருகதாஸ் கேரக்டர் என்ன என்பதையே இந்த சீசனில் புரிந்து கொள்ள முடியவில்லை.

  நடிகைகள் கைது, ரெய்டு, விசாரணை.. 2020-ல் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய போதை பொருள் வழக்கு!

  நீங்க நல்லவரா? கெட்டவரா? பாஸ் என்பது போலவே அவரது நடவடிக்கைகள் உள்ளன.

  கேப்டன் டாஸ்க்

  கேப்டன் டாஸ்க்

  இன்றைய முதல் புரமோவில் அர்ச்சனா, ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி முருகதாஸ் அடுத்த வார கேப்டன் பதவிக்காக போட்டிப் போடும் பிசிக்கல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. பிசிக்கல் டாஸ்க்ன்னா பாலா வின் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் அதற்கு வொர்த் இல்லை என்பதை நிரூபித்து அர்ச்சனாவிடம் வெற்றியை பறிகொடுத்தார்.

  ரம்யாவும் பிக் பாஸும்

  ரம்யாவும் பிக் பாஸும்

  இரண்டாவது புரமோவில் ரம்யாவும் பிக் பாஸும் கன்ஃபெஷன் ரூமில் அரட்டை அடித்த காட்சிகள் இடம்பெற்றன. எல்லோரையும் கூப்பிட்டு குடும்பத்தை பற்றி பேசி அழ வைத்து வந்த பிக் பாஸ், ரம்யாவிடம் வேறு மாறி பேச, ரம்யாவும் பதிலுக்கு பிக் பாஸிடமே கேள்விகளை கேட்க ஆரம்பித்து விட்டார்.

  மூன்றாவது புரமோ

  மூன்றாவது புரமோ

  இந்நிலையில், இன்றைய மூன்றாவது புரமோவில் பாலாஜி முருகதாஸ், ரியோ மற்றும் ஆரியிடம் மன்னிப்பு கேட்கும் காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை ரொம்பவே ஷாக்காக்கி உள்ளது. என்ன திடீர்னு பாலா இப்படி மாறிட்டாரே? என்கிற ஆச்சர்யத்தில் ரசிகர்கள் அந்த புரமோவை கண்டு வருகின்றனர்.

  செம ஸ்டைலில் ஆரி

  செம ஸ்டைலில் ஆரி

  குருநாதர் பிக் பாஸ் சொன்னதால், டோட்டலாக சேஞ்ச் ஆகும் முயற்சியில் புதுசா கண்ணாடி எல்லாம் போட்டுக் கொண்டு செம ஸ்டைல் லுக்கில் ஆரி ஹவுஸ்மேட்களுடன் உட்கார்ந்திருக்கிறார். பாலாஜி திடீரென இருவரிடம் இப்படி மன்னிப்பு கேட்டதும் ஆரியும், ரியோவும் உருகி விட்டனர்.

  கட்டிப்பிடித்த ரியோ

  கட்டிப்பிடித்த ரியோ

  நீங்களாம் வாழ்க்கையில எவ்வளவோ கஷ்டங்களை பார்த்து இந்த இடத்துக்கு வந்திருப்பீங்க, நான் இப்போதான் அடியெடுத்து வைக்கிறேன். ஆனால், உங்களை எல்லாம் இறக்கிவிட்டு ஏறப் பார்த்தேன், அது ரொம்ப தப்புன்னு புரிஞ்சிக்கிட்டேன் என டோட்டலமாக மாறி பாலா பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  நம்பலாமா? வேண்டாமா?

  நம்பலாமா? வேண்டாமா?

  நேற்றைய எபிசோடில் ஆரியை பற்றி ஆஜீத் மற்றும் ரம்யாவிடம் புரணி பேசிய பாலா, ஆரி உறியடிக்கும் போது மிஸ் ஆன நிலையில், அப்படி சிரித்தார். இந்நிலையில், இன்றைய எபிசோடில் ஆரி மற்றும் ரியோவிடம் பாலா மன்னிப்பு கேட்பதை பார்த்த ரசிகர்கள், உலக மகா நடிப்புடா சாமி என்றும், பாலாவை நம்பலாமா? வேண்டாமா? என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  எல்லாம் டைட்டிலுக்காக

  எல்லாம் டைட்டிலுக்காக

  எப்படியாவது பிக் பாஸ் டைட்டிலை தட்டித் தூக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் பாலா, தன்னை அடிக்கடி நல்லவராக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார் என்றும், இன்னும் 4 முதல் 5 வாரங்களே உள்ள நிலையில், பிக் பாஸ் டைட்டிலுக்காகவே பாலா இப்படி நடிக்கிறார் என்றும், பாலா மனது உண்மையிலேயே குழந்தையை போன்றது தான். மெச்சூரிட்டி இல்லாமல் தான் அவர் ஆரம்பத்தில் இருந்தார். இப்போது திருந்திவிட்டார் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

  English summary
  Bigg Boss Tamil 4 Day 75 third promo out now and goes viral after Balaji Murugadoss apologise to Aari and Rio in that promo.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X