twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதுக்கு கூட அப்பா வரல.. குடிச்சிட்டு அடிப்பாரு.. அம்மாவும் சரியில்ல.. அழ வச்சிட்டாரு பாலாஜி!

    |

    சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் 5ம் நாள் எபிசோடில் பாலாஜி முருகதாஸ் பேசிய பேச்சு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அழ வைத்து விட்டது.

    Recommended Video

    எனக்கு திக்குவாய் போட்டியாளர்களின் மறு பக்கம் Bigg Boss 4 Tamil Review

    பாகுபலி என ஹவுஸ்மேட்ஸ்களால் அழைக்கப்படும் பாலாஜி முருகதாஸ், வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு வளர்ந்த கதையை சொல்ல சொல்ல ரசிகர்கள் மற்றும் ஹவுஸ்மேட்ஸ் கண் கலங்க ஆரம்பித்தனர்.

    சரியா வளர்க்க முடியலன்னா, அப்புறம் ஏன் குழந்தைங்கள பெத்துக்குறீங்க என தவறான பெற்றோர்களுக்கு சவுக்கடி கேள்வியை பாலாஜி கேட்டது உண்மையாவே பல இதயங்களை உலுக்கி இருக்கும்.

    அப்பாவும் அம்மாவும் ஆல்கஹாலிக்.. பாகுபலி பாலாஜி முருகதாஸ் வாழ்க்கையில இப்படியொரு சோகக் கதை இருக்கா?அப்பாவும் அம்மாவும் ஆல்கஹாலிக்.. பாகுபலி பாலாஜி முருகதாஸ் வாழ்க்கையில இப்படியொரு சோகக் கதை இருக்கா?

    புரமோவிலே அழ வைத்து விட்டார்

    புரமோவிலே அழ வைத்து விட்டார்

    ஜாலியா மற்றவர்களை வம்பிழுத்துக் கொண்டு சுற்றித் திரியும் பாலாஜி முருகதாஸ் தனது வாழ்க்கை எப்படி இருந்துச்சு, நான் எப்படி வளர்ந்தேன்னு சொல்கிற கதையோடு வெளியான 3வது புரமோவை பார்த்தே ரசிகர்கள் அழ தொடங்கி விட்டனர். நிகழ்ச்சியில் இன்னும் அவரது முழுக் கதையும் நெஞ்சை உடைக்கும் விதமாக இருந்தது தான் 5ம் நாள் எபிசோடின் ஹைலைட்.

    குடிகார அப்பா கண்டுக்காத அம்மா

    குடிகார அப்பா கண்டுக்காத அம்மா

    சின்ன வயசுல ஸ்கூல்ல சேர்த்துவிட்டதோட அவ்ளோ தான், எந்த பேரன்ட்ஸ் மீட்டிங், ஃபங்ஷன் என எதுக்குமே வர மாட்டாங்க.. ஒரு நாள் நைட் தூக்கத்துல தலை வலிச்ச மாதிரி இருந்துச்சு, அப்பா கையில கேஸ் டியூப் வச்சிருந்தார்.. அப்போதான் தெரிஞ்சது குடி போதையில என்ன அடிச்சிருக்காருன்னு.. அப்பா கூட சேர்ந்து அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கு அடிமை ஆகிட்டாங்க என பாலாஜி சொன்னதை கேட்டு ஷாக் ஆகாத ஆளே கிடையாது.

    ரெண்டு பேருமே சரியில்லை

    ரெண்டு பேருமே சரியில்லை

    வீட்டுக்கு வந்தா, பழைய கஞ்சி இருக்கும், அதைத் தான் பல நாள் சாப்பிடுவேன், அப்பாவும் அம்மாவும் என்ன கண்டுகிட்டதே இல்ல, அம்மா மலேஷியாவுல வேலை செஞ்சிட்டு இருந்தாங்க, அப்பா அடி தாங்காம அம்மா கிட்ட சொன்னேன், அவங்க அப்புறம் வந்தாங்க, ஆனா அவங்களும் அப்பா கூட சேர்ந்துகிட்டு குடிக்க ஆரம்பிச்சுட்டாங்க..

    பாத்ரூம்ல போய் ஒளிஞ்சுக்குவேன்

    பாத்ரூம்ல போய் ஒளிஞ்சுக்குவேன்

    ஸ்கூல்ல காலையில ஒரு பிரேக் இருக்கும், எல்லா பசங்களும் ஸ்நாக்ஸ் வாங்கி திங்கப்பாங்க, என்கிட்டத் தான் காசு இல்லையே.. நான் அப்படியே வேடிக்கை பார்த்துட்டு வருவேன், அப்புறம் லஞ்ச் டைம், என நிறுத்தி அழ ஆரம்பித்து விட்டார், லஞ்ச் வரது எல்லாம் லாட்டரி அடிக்கிற மாதிரி எனக்கு, யாருமே பாவமா பார்த்தா பிடிக்காது, பாத்ரூம்ல போய் ஒளிஞ்சிப்பேன்.. டீச்சருங்க கடைசியில, யார் சாப்படலன்னு கேட்டு, அவங்க சாப்பிட ரொட்டியோ, பன்னோ கொடுப்பாங்க என பாலாஜி சொல்லும் போது அத்தனை கண்களும் உண்மையாய் கலங்கின.

    மிஸ்டர் இன்டர்நேஷனல்

    மிஸ்டர் இன்டர்நேஷனல்

    ஓவர் டிப்ரஸனா இருக்கும் போது தான் ஜிம்முக்கு போய் சேர்ந்தேன், அங்க சிக்ஸ் பேக் வைத்து, பாடியை பில்ட் பண்ணேன், என்னால என் மூஞ்சிய பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி மாத்திக்க முடியல, பட் பாடிய ஷேப் பண்ண முடிஞ்சது, மிஸ்டர் இந்தியா ஆடிஷன்ல 16வது ஆளா வந்தேன், ஜெயிச்சுட்டு சென்னை வந்தப்போ 4 ஈ காக்கா கூட இல்லை, அப்புறம் மிஸ்டர் இன்டர்நேஷனல் 2018ல ஜெயிச்சுட்டு சென்னை வந்தேன், அப்போ 4 பிரெண்ட்ஸ்ங்க இருந்தாங்க என்றார்.

    அதுக்கு கூட அப்பா வரல

    அதுக்கு கூட அப்பா வரல

    மிஸ்டர் இன்டர்நேஷனல் பட்டம் ஜெயிச்சப்பக் கூட அப்பா வரலைன்னு சொன்ன பாலாஜி, உங்களால குழந்தையை பெத்து வளர்க்க முடியலைன்னா நீங்க எல்லாம் குழந்தை பெத்து என்ன பண்ண போறீங்க என சவுக்கடி கேள்வியை தப்பான பெற்றோர்கள் அனைவரும் முன்பாகவும் எழுப்பி உள்ளார்.

    எங்க அப்பனுக்கே நான் தான் அடையாளம்

    எங்க அப்பனுக்கே நான் தான் அடையாளம்

    மேலும், கடைசியில் மிகவும் மனம் நொந்து போய் பேசிய பாலாஜி முருகதாஸ், என் பேருக்கு பின்னால இருக்க எங்க அப்பன் முருகதாஸுக்கு இப்ப இந்த பாலாஜி தான் அடையாளமா இருக்கான் என சுயமா பல சோதனைகளை கடந்து வாழ்க்கையில சாதிச்சது எப்படின்னு பாலாஜி சொன்னதை கேட்டு ஹவுஸ்மேட்ஸ் பாராட்டினார்கள்.

    கட்டித் தழுவி ஆறுதல்

    கட்டித் தழுவி ஆறுதல்

    என்னடா இப்படியொரு பயில்வான் மனசுல இந்த அளவுக்கு ஒரு சோகமான கதையா என ரியோ ராஜ், சுரேஷ் சக்கரவர்த்தி, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட ஹவுஸ் மேட்ஸ் அவரை கட்டிப் பிடித்து இனிமே நண்பர்கள் நாங்க இருக்கோம்னு ஆறுதல் சொன்னார்கள்.

    English summary
    Balaji Murugadoss emotional past story make all the contestant gets into tears and also the Bigg Boss viewers too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X