உள்ளே நுழைந்ததும் வேலையை காட்டிய பாலா.. ரெஸ்ட்ரிக்டட் ஏரியாவில் நுழைந்து ரூல் பிரேக் பண்ணியாச்சு!

சென்னை: பாலாஜி முருகதாஸ் என்றாலே அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க் பண்ணுவதும் ரூல்ஸ் மீறுவதும் தான் என்பது சீசன் 4ஐ பார்த்த ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும் இந்நிலையில், முதல் நாளிலேயே பாலாஜி முருகதாஸ் ரூல்ஸ் மீறியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி 30ம் தேதி கோலாகலமாக கிராண்ட் லாஞ்ச் நிகழ்ச்சியுடன் தொடங்கி உள்ளது.

மொத்தம் 14 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதிகம் எதிர்பார்த்த ஓவியா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

ஓவியா இல்லை

ஓவியா இல்லை

கடைசி வரை ஓவியா என்ட்ரி கொடுப்பாரா என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் 14 போட்டியாளர் பற்றி மட்டுமே கமல் பேசியிருந்தார். ஓவியாவின் வருகை குறித்தோ வைல்டு கார்டு சிக்னல் குறித்தோ எந்தவொரு தகவலும் இல்லை.

7வது போட்டியாளராக

7வது போட்டியாளராக

தாடி பாலாஜி 6வது போட்டியாளராக உள்ளே நுழைந்ததும் அப்போ பாலாஜி முருகதாஸ் வரலையா என சில ரசிகர்கள் கமெண்ட் போட துவங்கி விட்டனர். அடுத்த நபராகவே சண்டையில கிழியாத சட்டை இல்லை குமாரு என சுல்தான் பாடலுடன் கலக்கலாக உள்ளே நுழைந்தார் பாலாஜி முருகதாஸ்.

ரூல்ஸ் பிரேக்

ரூல்ஸ் பிரேக்

பாலாஜி முருகதாஸ் சீசன் 4ல் ஏகப்பட்ட ரூல்ஸ் பிரேக் செய்தார். சனம் ஷெட்டியுடன் அவருக்கு நடந்த அந்தவொரு பிரச்சனை காரணமாக ஏகப்பட்ட பேர் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கொந்தளித்தனர். ஆனால், கடைசியாக ரன்னர் அப் ஆகி வெளியேறினார். இந்நிலையில், இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் வீட்டிற்குள் நுழைந்ததுமே ரூல்ஸ் பிரேக் செய்தார் பாலாஜி முருகதாஸ்.

ரெஸ்ட்ரிக்டட் ஏரியா

ரெஸ்ட்ரிக்டட் ஏரியா

ரெஸ்ட்ரிடட் ஏரியா என போர்டு போடப்பட்டு மாஸ்டர் பெட்ரூம் ஒன்று தனியாக அமைக்கப்பட்டிருந்தது. வனிதா, நிரூப் உள்ளிட்டோர் அதை பார்த்து அதற்குள் செல்லாமல் இருந்த நிலையில், பாலாஜி முருகதாஸ் வந்த உடனே அதற்குள் சென்று அங்கிருந்த பெட்டில் படுத்து புரண்டார். பாலா தனது வேலையை ஆரம்பிச்சிட்டான்பா என ரசிகர்கள் குதூகலமாகி உள்ளனர்,

கண்டுக்காத பிக் பாஸ்

கண்டுக்காத பிக் பாஸ்

போட்டியாளர்கள் உள்ளே நுழையும் போது பிக் பாஸ் குரல் கொடுப்பார் என எதிர்பார்த்தால் கொடுக்கவே இல்லை. அதே போல பாலாஜி முருகதாஸ் ரெஸ்ட்ரிக்டட் ஏரியாவுக்குள் நுழைந்த போதும் அவர் வாய் திறக்கவில்லை. பிக் பாஸுக்கே தன்னைப் பற்றி தெரியும் என கெத்தாக நிரூப், வனிதா உள்ளிட்டோருடன் பாலாஜி சொன்னது செம கெத்து தான்.

டைட்டில் ஜெயிப்பாரா

டைட்டில் ஜெயிப்பாரா

பிக் பாஸ் அல்டிமேட்டில் பிசிக்கல் டாஸ்க்கில் நிரூப்புக்கும் பாலாவுக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 4வது சீசனில் ரன்னர் அப் ஆன பாலாஜி முருகதாஸ் இந்த முறை டைட்டிலை ஜெயிப்பார் என ஏகப்பட்ட பாலா ஆர்மியினர் கமெண்ட் செய்து வருகின்றனர். பாலாவின் ஆட்டம் இதே போல தினமும் அதிரடியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X