For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அடப்பாவிகளா.. அர்னால்டையே அழ வச்சிட்டீங்களே.. கதறி அழுத பாலா.. கர்ச்சீப் நீட்டும் ரசிகைகள்!

  |

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் பெண் ரசிகைகளின் கனவுக் கண்ணனாக மாறி உள்ள பாலாஜி முருகதாஸையே இன்றைய நிகழ்ச்சியில் அழ வைத்து விட்டனர்.

  பாலா அழுவதை புரமோவிலே பார்த்து அழுத பெண் ரசிகைகள், நிகழ்ச்சியை பார்த்து டிவிக்களுக்கு முன் அவருக்காக கர்ச்சீப்களை எல்லாம் நீட்டுவது ரொம்பவே டூ மச்.

  அர்ச்சனா ஆடிய ஆட்டத்துக்கும், சக ஹவுஸ்மேட்கள் பேசிய பேச்சையும் கேட்டுவிட்டு தாங்க முடியாமல் அர்னால்ட் போல இருக்கும் பாலாவே அழுதுட்டார்.

  ஓவர் விஷம்.. அர்ச்சனா பண்றதை விட இந்த ரியோ பண்றது இருக்கே.. அப்பப்பா தாங்க முடியல!

  அழுகை தான் ஹைலைட்

  அழுகை தான் ஹைலைட்

  பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் அந்த நிகழ்ச்சியின் உச்ச பட்ச ஹைலைட்டான விஷயமே அழுகை தான். தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழி பிக் பாஸ் இருந்தாலும் இந்த ஸ்க்ரிப்ட் கண்டிப்பாக இருக்கும். எவ்வளவோ பிரச்சனைகள் அலுவலகங்களில் இருந்தாலும் அழாத நபர்கள், பிக் பாஸ் வீட்டில் கேவி கேவி அழுது டி.ஆர்.பியை எகிற வைத்து வருகின்றனர்.

  வேல்முருகனுக்கு கோபம் வரும்

  வேல்முருகனுக்கு கோபம் வரும்

  க்ளீனிங் டீம் தலைவரான வேல்முருகன் கத்தி பேச தொடங்கியதும், அவரோட டோன கவனியுங்க என பாலாஜி சொன்னதும், வேல்முருகன் மேலும் எகிற ஆரம்பித்து விட்டார். ரம்யா பாண்டியன், பாலா அந்த டோன்லாம் பார்க்காதீங்க என சமாதானப்படுத்த முயல, நீங்க என்னை குழப்பிக்கிட்டே ஏறி மிதிச்சிட்டு போயிடுறீங்க என பொங்கினார்.

  மேதாவியும் கிடையாது நல்லவனும் கிடையாது

  மேதாவியும் கிடையாது நல்லவனும் கிடையாது

  தொடர்ந்து வேல்முருகன் கத்த தொடங்கியதும், நான் மேதாவியும் கிடையாது, நல்லவனும் கிடையாது என மனசு உடைந்து போகும் நிலைக்கு பாலாஜி முருகதாஸ் மாறிவிட்டார். வேல்முருகனை சமாளிக்க, நீங்க வந்து கேட்டுருந்தா நான் அப்படி பேசியிருக்க மாட்டேன் என சொல்ல, இது தான் சமயம் என காத்திருந்த அர்ச்சனா, அப்போ என்கிட்டத் தான் பிரச்சனைன்னு நேரடியா சொல்லு என்றார்.

  பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ

  பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ

  இவ்ளோ நாள் நல்லா தமிழ்ல பேசிட்டு இருந்த ரெண்டு பேரும் ஆங்கிலத்தில் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ அடுத்த 4 நாட்களுக்கு நான் தான் தலைவர்.. நான் சொல்றதை தான் நீ கேட்டாகணும் பாலா என மீண்டும் அதிகாரத்தை அர்ச்சனா கையில் எடுத்துக் கொண்டார்.

  அதெல்லாம் கேட்க முடியாது

  அதெல்லாம் கேட்க முடியாது

  ஆனால், எதற்கும் அசராமல் நின்ற பாலா, உங்களை எல்லாம் தலைவரா ஏத்துக்க முடியாது. உங்க பேச்சை கேட்க முடியாது. நீங்க என்ன வேணா பண்ணிக்கோங்க என மெர்சல் காட்டி விட்டார். உடனே ரம்யாவுடன் புலம்பிய அர்ச்சனா 38 வயசு ஆகும் என்னால், 24 வயசு பையன் கூட சண்டை போட முடியாது என்றார்.

  அர்ச்சனாவுக்கு ஆறுதல்

  அர்ச்சனாவுக்கு ஆறுதல்

  அங்கிருந்து பாலா சென்றதும், அழத் தொடங்கிய அர்ச்சனாவுக்கு ரியோ ராஜ் கட்டிப்பிடித்து, நெற்றியில் முத்தமிட்டு ஆறுதல் சொல்ல ஆரம்பிக்க, அருகே வந்த சோமசேகரும் நான் ஒரு வாட்டி கட்டிபிடிச்சிருக்கேன் என்பது போல அர்ச்சனாவை கட்டிப் பிடித்து ஆறுதல் சொன்னார். ஆனால், பாலாவை யாருமே கண்டு கொள்ளவில்லை.

  தனியாக அழுத பாலா

  தனியாக அழுத பாலா

  கார்டன் ஏரியாவில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டு ரொம்பவே ஃபீல் பண்ணி அழத் தொடங்கினார் பாலா. என்னடா ஒரே எபிசோட்ல இப்படி எல்லாரையும் மாத்தி மாத்தி அழ வைச்சா பாடி தாங்காதேடா என்பது போல பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணி அந்த காட்சியை பார்த்தனர். பாலாவின் ரசிகைகள் எல்லாம் விட்டா அர்ச்சனாவை அடித்தே போட்டு இருப்பார்கள் அந்த அளவுக்கு கோபம் வந்து விட்டது.

  English summary
  Balaji Murugadoss cried a lot after quarrel with Archana and feeling so lonely in the Bigg Boss house no one cared for him on the spot.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X