For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அன்புக்கு ஏன் பயப்படுறேன்.. கமல் கிட்ட பாலா சொன்ன விளக்கம்.. வசமா மாட்டிக்கிட்டியே பயில்வான்!

  |

  சென்னை: அன்பு வச்சு அர்ச்சனா விளையாடுவது உங்களுக்கு எப்படி பிரச்சனையாகிறது பாலா என கமல் கேட்டதும் அதற்கு விளக்கம் கொடுத்து வசமா சிக்கிக் கொண்டார் பயில்வான்.

  பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil

  பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு பெரிய குரூப் இருக்கு என்றும், அர்ச்சனாவின் தலைமையில் அந்த குரூப் இயங்குவதாக ஆரம்பத்தில் இருந்தே பாலா பிரச்சனை பண்ணி வருகிறார்.

  அவருக்கு ஆதரவாக திரண்ட ஆட்களை கொண்டு, சம்யுக்தாவை டம்மி தலைவராக்கி ஒரு சின்ன குரூப்பையும் பாலா உருவாக்கி வைத்திருக்கிறார் என்பது அவருக்கே தெரியாதது தான் புதிராக உள்ளது.

  நீங்க கூட தான் குட்டி குரூப் வச்சிருக்கீங்க.. பாலாவை வச்சு விளாசிய கமல்.. அர்ச்சனா குரூப் ஹேப்பி!

  அன்பு உங்களை என்ன செய்கிறது

  அன்பு உங்களை என்ன செய்கிறது

  அர்ச்சனாவின் அன்பு உங்களை என்ன செய்கிறது. எந்த வகையில் உங்களோட கேம் பாதிக்கும் என நினைக்கிறீங்க என பாலாவிடம் கமல் நேரடியாகவே கேட்டு விட்டார். ரொம்ப நேரமா அதே பிரச்சனையை பாலா முன் வைத்து புதிய பிரச்சனைகளை கிளப்பும் நிலையில், நீங்களே அதை விளக்கி விடுங்கள் என கமல் கொடுத்த ஸ்பேஸை பாலா பயன்படுத்திக் கொண்டு விளக்க ஆரம்பித்தார். வலைக்குள் மீன்!

  அன்புக்கு ஏன் பயப்படுறேன்

  அன்புக்கு ஏன் பயப்படுறேன்

  கமல் அழகா பாலாஜிக்கு விரித்த வலையில் தானா வந்து மீனா விழுந்துட்டார் பாலாஜி. அர்ச்சனா முவர் மீது காட்டும் அன்பு காரணமாக அவர்கள் நாமினேஷனுக்கு வர மாட்றாங்க, பெஸ்ட் பர்ஃபார்மர் ஆகுறாங்க, வொர்ஸ்ட் பர்ஃபார்மர் ஆக மாட்டேங்கிறாங்க, போன் காலுக்கு அப்புறம் தான் இந்த வாரம் அது கொஞ்சம் மாறியது என்றார்.

  கடைசியில் மனஸ்தாபம் வரும்

  கடைசியில் மனஸ்தாபம் வரும்

  தங்களுக்கு வேண்டியவர்களே கடைசி வரைக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் திட்டத்தை போட்டு அர்ச்சனா குரூப் விளையாடி வருகிறது என்றும், நான் தனியாக என் கேமை விளையாடுகின்றேன் என்றும் வாய்க்கூசாமல் பொய் கூறிய பாலா, கடைசி 30 நாட்களில், நமக்குள்ள இருக்கிறவங்க கூடவே குத்திக்கிற நிலைமை வரும், அந்த மனஸ்தாபம் வேண்டாம் என்று பார்க்கிறேன் என்றார்.

  அப்போ ஷிவானி கூட

  அப்போ ஷிவானி கூட

  அப்போ ஷிவானியையும் சம்யுக்தாவையும் எதிலும் நாமினேட் செய்யாமல் வச்சிருக்கிங்களே அதற்கு பெயர் என்ன என கேபி கேட்டு, பாலாவின் மூக்கை உடைத்தார். பாலாவின் விளக்கத்தை பார்த்த ரசிகர்களும், ஷிவானி கூட கடைசியில பாலாவே சண்டை போடுவார் போல என்றும் கமெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

  சரியா சொன்ன சம்யுக்தா

  சரியா சொன்ன சம்யுக்தா

  அர்ச்சனா, ரியோ ராஜ், நிஷா, சோமசேகர், ஜித்தன் ரமேஷ் மற்றும் கேபி குரூப்பாக இருந்தாலும், மற்றவர்களை காலி பண்ண வேண்டும் என்றும், காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் எப்போதுமே பிளான் பண்ணி விளையாடவில்லை என சரியா சொன்ன சம்யுக்தா, ஆறு பேர் கொண்ட குழுவாக அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதையும் பாலாவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக சொல்லி சென்றார்.

  ரமேஷ் சும்மா விடல

  ரமேஷ் சும்மா விடல

  சம்யுக்தா 7 பேர், 6 பேர் என லிஸ்ட் போட்டு சொன்னதும், ஜித்தன் ரமேஷும் சும்மா இல்லை. நீங்களும் தான் டீமா இருக்கீங்க என பாலா, ஷிவானி, சம்யுக்தா, ஆஜீத், சனம் ஷெட்டி, அனிதா சம்பத் என லிஸ்ட் போட்டார். ரம்யா பாண்டியன், ஆரி மட்டுமே எந்த குரூப்பிலும் இல்லை என இரு அணிகளும் தெளிவுப்படுத்தி உள்ளன. சனம் மற்றும் அனிதா நாங்க அந்த குரூப் இல்லை தனி குரூப் என்றும் கூவினர்.

  ஷப்பா முடியல

  ஷப்பா முடியல

  அப்போ எல்லாருமே அப்படித்தான் இருக்கீங்களா என நினைத்துக் கொண்ட கமல், தனித்தனியா இனிமேலாவது விளையாடுங்க, வெளியே இருக்கிற ஆடியன்ஸ் 56 நாளா கூட்டம் சேர்த்துக் கொண்டு என்ன குரூபிசம் கேம் விளையாடுறீங்களா என கழுவி ஊற்றுகின்றனர் என்பதை சொல்லாமல் சொல்லி குட்டு வைத்துள்ளார். இனிமேலாவது தனியா கேம் ஆடுறாங்களான்னு பார்ப்போம்.

  English summary
  Balaji Murugadoss explains to Kamal Haasan about groupism fear in Bigg Boss Tamil 4 house. He feared lot about to lose his game in front of Archana gang.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X