For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆம்பள பையனான்னு கேட்டா யாருக்குத் தான் கோபம் வராது.. கேமரா முன் நின்று புலம்பும் பாலாஜி.. பாவம்பா!

  |

  சென்னை: ஆம்பள பையன் மாதிரி விளையாடுன்னு ஆரி சொன்னதை பிடித்துக் கொண்டு பாலா அடுத்த பிரச்சனையை ஆரம்பிப்பார் என நினைத்தது போலவே ஆரம்பித்துவிட்டார்.

  எல்லா புரமோவிலும் பாலா, ஆரி சண்டை மட்டும் தான் ஹைலைட்டாக காட்டி வருகின்றனர் பிக் பாஸ் குழுவினர்.

  ஒற்றை காலை தூக்கி தெனாவட்டு போஸ்…வைரலாகும் இனியா இன்ஸ்டா போஸ்ட்!

  தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் பாலாஜி முருகதாஸ் தனது கண்ணீர் கருத்தை நன்றாக பதிவு செய்கிறார்.

  மன்னிப்பும் மல்லுக்கட்டும்

  மன்னிப்பும் மல்லுக்கட்டும்

  பாலாஜி முருகதாஸ் இந்த சீசனில் இந்த இரண்டு விஷயங்களை மட்டுமே செய்து விளையாடி வருகிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் முன்பு வைக்கப்பட்டுள்ளது. ஆரியுடன் மல்லுக்கட்டுவதும், பின்னர் அவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பதும், மீண்டும் மல்லுக்கட்டுவதுமாகவே தனது ஆட்டத்தை கொண்டு செல்கிறார்.

  அந்தாக்‌ஷரி ஆடுறாங்க

  அந்தாக்‌ஷரி ஆடுறாங்க

  இறுதிச்சுற்றுக்கு செல்வதற்கான டிக்கெட்டை வெல்ல பிக் பாஸ் குழு வைக்கும் போட்டிகள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்களிடம் கேட்டாலே நல்லா கஷ்டமான டாஸ்க்குகளை எல்லாம் கொடுப்பாங்க, ஆனால் இவங்க அந்தாக்‌ஷரி ஆட வைத்து ஷிவானிக்கு ஸ்கோர் ஏற்ற பார்க்கிறாங்க என கலாய்த்து வருகின்றனர். ஆஜீத் இருந்திருந்தால் இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.

  ஷிவானியை காப்பாற்ற

  ஷிவானியை காப்பாற்ற

  ஆரி ஓடும் இடத்தில் தடுப்புகளை வைத்து பாலாஜி மறுபடியும் கேமில் மோசடி செய்கிறார் என ஆரி குற்றம்சுமத்தும் காட்சிகள் இரண்டாவது புரமோவில் இடம்பெற்றுள்ளன. ஓடி ஆடி விளையாடணும், ஆம்பள பையன் தானே நீ என ஆரி சொன்ன வார்த்தையை வைத்து இன்றைய சண்டையை பாலா கிளப்பியுள்ளார்.

  போட்டுக் கொடு

  போட்டுக் கொடு

  ஆரி தனது கருத்துக்களை நேரில் பேசாமல், கேமரா முன் நின்று பதிவு செய்கிறார் என இழிவாக பேசிய பாலாஜி முருகதாஸ் இன்றைய மூன்றாவது புரமோவில் அதையே செய்கிறார் என ஆரியின் ஆர்மியினர் அடித்து வெளுத்து வருகின்றனர். பாலாஜி தனது அடுத்த திட்டத்தை ஆரம்பித்து விட்டார் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

  ஆம்பள பையனான்னு

  ஆம்பள பையனான்னு

  சோம்பேறின்னு சொல்லாதீங்கன்னு ஒரு பிரச்சனையை கிளப்பிய பாலாஜி முருகதாஸ், கோபத்தில் பேக்கு, அடி முட்டாள் என சொன்னேன், வாடா போடான்னு பேசினேன் என தனது வார்த்தைகளை நியாயமாக்கியது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. இன்றைய நிகழ்ச்சியிலும் ஆரி ஆம்பள பையன் தானே நீ என கேட்டதை வைத்து அடுத்த பஞ்சாயத்தை கிளப்புகிறார்.

  ஆரிக்கு டோஸ் இருக்கும்

  ஆரிக்கு டோஸ் இருக்கும்

  கடந்த வாரம் பாலாஜி முருகதாஸ் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு கமல் சார் டோஸ் விட்டது போல, இந்த வாரம் இந்த ஆம்பள பையனா என்கிற வார்த்தை பிரயோகத்திற்கும் கமல் நிச்சயம் கண்டிப்பார் என்று தெரிகிறது. அவர் கட்டாயம் கண்டிக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாலா அதனை கேமரா முன் பதிவு செய்கிறார். இன்னைக்கு ஷோவில் சண்டை எப்படி வெடிக்கிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

  வேற யாராவது

  வேற யாராவது

  ஆரி மற்றும் பாலாவின் சண்டையை வைத்தே இந்த சீசன் பிக் பாஸை ஓட்டி விடலாம் என நினைத்து விட்டார்கள் போல தெரிகிறது. ஆரியுடன் மோதாமல், மற்ற யாராவது இருவர் சண்டை போடுங்கப்பா, இவங்க சண்டை போடுறதும் பின்னர் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகுறதையும் பார்த்து போரடிச்சுடுச்சு என ஏகப்பட்ட ரசிகர்கள் பிக் பாஸ் நடத்துபவர்களிடம் பதிவு செய்து வருகின்றனர்.

  English summary
  Balaji Murugadoss feels for Aari talks about his manhood in front of camera and he wants to register Aari’s abuse.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X