For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கெடுவான் கேடு நினைப்பான்.. மத்தவங்க பாடி ஜெயிக்க கூடாது.. இதுதான் பாலாவோட ஸ்ட்ராட்டஜி.. கடைசியில்?

  |

  சென்னை: பாய்ந்து பாய்ந்து பஸர் அடித்து விட்டு, மத்தவங்களை பாட விடாமல் செய்வதையே பாலா ஸ்ட்ராட்டஜியாக கொண்டு செயல்பட்ட நிலையில், கடைசியில் கடைசி இடத்தையே பிடித்தார்.

  சென்னை: பாட்டு பாடும் டாஸ்க்.. இவன் தந்திரன் பாலா: காண்டு ரசிகர்கள்.. கடைசியில் நடந்த டுவிஸ்ட்!

  எந்த ஒரு விளையாட்டிலும் சீட்டிங் செய்யாமல் நேர்மையாக பாலா விளையாடுவதே கிடையாது என்கிற குற்றச்சாட்டை பிக் பாஸ் ரசிகர்கள் முன் வைத்துள்ளனர்.

  பாட்டு பாடி ஜெயிக்கும் டாஸ்க்கில் மற்றவர்கள் வாய்ப்பை தட்டிப் பறித்த பாலாவுக்கு ஒரு மதிப்பெண் மட்டுமே கிடைத்தது.

  ஆரி ஒரு தடவ தான் சொன்னாரு.. அதையே பாலா நூறு தடவை சொல்லிட்டாரு.. 'ஆம்பள பையன்' மேட்டரு!

  தெரிஞ்சா பாடு

  தெரிஞ்சா பாடு

  ஒலிக்கப்படும் பாடலின் இசைக்கான பாடல் வரிகள் தெரிந்தால், கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருக்கும் பஸரை அடித்து விட்டு பாட வேண்டும் இதுதான் டாஸ்க். யார் முதலில் பஸர் அடிக்கிறாரோ அவருக்கு மட்டுமே பாடுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படும். ஆனால், இந்த கேம் புரியாமல் வேற ஒரு ஸ்ட்ராட்டஜி போட்ட பாலா வசமாக சிக்கிக் கொண்டார்.

  சில்லறை வாரிய கேபி

  சில்லறை வாரிய கேபி

  பாலாவுக்கு சரிக்கு சமமாக அத்தனை முறை ஓடிப் போய் பஸரை அடித்து பலமுறை விழுந்து சில்லறை வாரினார் கேபி. ஆனாலும், ஒரு முறை கூட அழுது சீன் போடவில்லை. சிரித்துக் கொண்டே அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்ட கேபிக்கு நிச்சயம் ஓட்டுக்கள் குவியும் என்றே தெரிகிறது.

  யாரும் பாடக் கூடாது

  யாரும் பாடக் கூடாது

  தனக்கு பாட்டு தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. பஸர் அடித்து விட்டு, மற்றவர்களின் வாய்ப்பை தட்டிப் பறித்து விட வேண்டும் என பாலாஜி முருகதாஸ் தனக்குள் ஒரு ஸ்ட்ராட்டஜியை உருவாக்கிக் கொண்டு விளையாடியது, அத்தனை ஹவுஸ்மேட்களுக்கும் தெளிவாக புரிந்தது, ஆனால், அதனை விளையாட்டாகவே கேட்டு விட்டு அமைதியாகி விட்டனர்.

  பாட மறந்த பாலா

  பாட மறந்த பாலா

  பாலாவுக்கு உண்மையிலேயே பாட தெரிந்து தான் பஸர் அடிக்கிறாரா? இல்லை பாய்வது மட்டுமே தெரியுமா? என்பதே புரியாத புதிராகவே உள்ளது. முதல் ஆளாக சிறுத்தையை போல சீறிப்பாய்ந்து தொட்டு விடுகிறார். ஆனால், பாட மறுத்து பல வாய்ப்புகளை மற்றவர்களுக்கு செல்ல விடாமல் நல்லாவே தட்டிக் கழித்தார்.

  ஷிவானியுடன் சண்டை

  ஷிவானியுடன் சண்டை

  பாலாஜி பாட வரும் போது, ஷிவானி பேசி அவரை திசை திருப்பி விட்டார் என வீண் பழியை ஷிவானி மீது இரண்டாவது முறையாக பாலா போடுகிறார். பந்து பிடிக்கும் டாஸ்க்கிலும் ஷிவானி தான் தன்னை தள்ளி விட்டார் என அப்படி ஒரு சண்டை போட்டும், இன்னமும் ஷிவானி பாலா பின்னாடி சுத்துவது வேடிக்கை தான். இதுவே கேபிக்கு பதில் பாலாவை ஆரியோ அல்லது யாராவதோ தள்ளி விட்டு இருந்தால், அதனை பெரிய கன் டென்ட்டாக மாற்றி சீன் போட்டு இருப்பார் பாலா.

  கெடுவான் கேடு நினைப்பான்

  கெடுவான் கேடு நினைப்பான்

  அத்தனை தடவை மற்றவர்களின் வாய்ப்பை தட்டிப் பறித்த பாலாஜி முருகதாஸுக்கு கடைசியில் பிக் பாஸ் வச்சான் பாரு ஆப்பு என்பது போல, வெறும் ஒரு மதிப்பெண் மட்டுமே கொடுத்து பாலாவை கடைசி இடத்துக்கு தள்ளி விட்டார். கெடுவான் கேடு நினைப்பான் என்கிற பழமொழி பாலாவுக்கு அப்படியே பொருந்துகிறது என பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

  ரம்யா முதலிடம்

  அதிகமாக ஓடி போய் விழுந்து விளையாடாமல், தனக்கு வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரம்யா பாண்டியன் 5 புள்ளிகளையும், ஆரி 4 புள்ளிகளையும் ஈஸியாக பெற்றனர். ஷிவானி நாராயணன் இந்த சுற்றில் 7 மதிப்பெண்களை பெற்று மொத்தம் 19 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்திலும் ரம்யா 20 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளார்.

  English summary
  Netizens slams Balaji Murugadoss did cheating game to grab other opportunities and finally he get least points in song task.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X