For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எபிசோடு நல்லா போச்சு.. கொஞ்சம் ஓவரா திட்டிட்டேன் மன்னிச்சிக்கோங்க.. இது விவேக் காமெடி காப்பிடா!

  |

  சென்னை: ஷிவானி அம்மா பேசியதை மட்டும் வச்சி இந்த வார இறுதியை ஓட்ட முடியாது என்பதற்காக போட்ட ஸ்க்ரிப்டட் சண்டை என்றே சில நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வருகின்றனர்.

  Bigg Boss சனிக்கிழமை Episode, Aari செய்தது தப்பு | Kamal Hassan

  ரசிகர்களின் பிபியை எகிற வைக்க சண்டை போடுவதும், டிஆர்பி எகிறிவிட்டால், மீண்டும் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகிக் கொள்வதுமாகவே இதை சிலர் பார்க்கின்றனர்.

  ஓப்பனா சொல்லப் போனால், டிவி ஷோவில் சாமியார்கள் சண்டை போடும் விவேக் படத்தின் பழைய காமெடியின் காப்பி தான் இந்த வார ஸ்க்ரிப்ட் என்று பிக் பாஸ் நரி முகத்தை கிழித்துத் தொங்கவிட்டு வருகின்றனர்.

  வில்லன் பாலா

  வில்லன் பாலா

  படத்துல வில்லன் கத்தியால் குத்தி கொலை செய்வது, பெண்களை மானபங்கம் பண்ணுவது, ஹீரோவிடம் எப்போ பார்த்தாலும் சண்டை போடுவது என்பது போலத்தான் பிக் பாஸ் வீட்டில் பாலா வில்லத்தனம் பண்ணி வருகிறார். ஏற்கனவே ஆர்.கே. சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் டைசன் படத்தில் வில்லனாக நடித்தவர் தான் பாலா என்பதால், வில்லத்தனம் ஈஸியாக வந்துவிடுகிறது.

  பிபியை எகிறவைக்கும் டிஆர்பி

  பிபியை எகிறவைக்கும் டிஆர்பி

  டிஆர்பி நல்லது தான் அதற்காகத்தான் எல்லோரும் உழைக்கிறோம் என போன வாரம் கமல் பேசியிருந்தார். ஆனால், ரியாலிட்டி ஷோவில் டிஆர்பியை எகிற வைக்க சில சித்து வேலைகள் செய்யப்படுகிறது என்கிற சந்தேகம் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு நிகழ்ச்சியை உன்னிப்பாக பார்த்தாலே தெரிகிறது. அடுத்தவர்களை தகுதியற்றவர்கள் எனக் கூறி வெளியே அனுப்பும் கேம் தானே பிக் பாஸ்.

  வன்முறை வெடிக்காது

  வன்முறை வெடிக்காது

  இப்படி திட்டமிட்டு சண்டை போட்டுக் கொள்வதால், நிஜ ஆத்திரம் வராது, வன்முறை வெடிக்காது. இதுவே வெளியே நடந்தால் வந்த கோபத்துக்கு கொலையே விழுந்திருக்கும். கண்டிப்பாக குழந்தைகளை இந்த நிகழ்ச்சியை பார்க்க வைக்க வேண்டாம் என்பது தான் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட சில பிரபலங்களின் கருத்து.

  வெட்கமே இல்லையா

  வெட்கமே இல்லையா

  கண்டபடி திட்டிப் பேசிவிட்டு, பாலாஜி முருகதாஸ் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், மீண்டும் ஆரியிடம் வந்து மன்னிப்பு கேட்பது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை போதி மரத்தில் இருந்து ஞானம் வந்த புத்தனை போல பேசுவது எல்லாமே சித்தரிக்கப்பட்டவையாகவே தெரிகிறது. ஆனால், இது ஸ்க்ரிப்டட் இல்லை என்று தான் கடைசி வரை ஓட்ட வேண்டும், அப்போது தான் ஹோஸ்ட்டுக்கும் வேலை இருக்கும்.

  விவேக் காமெடி காப்பி

  விவேக் காமெடி காப்பி

  காக்கை சித்தராக விவேக் ஒரு படத்தில் பண்ணும் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. விவேக்கும் மயில்சாமியும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நான் தான் பெரிய சாமியார், நீ தான் பெரிய சாமியார்னு பேசி அடிச்சிப்பாங்க, வெளியே வந்ததும் இருவரும் காசை பிரிச்சி சேர்ந்துப்பாங்க, அந்த ஸ்க்ரிப்டை தான் பிக் பாஸ் இயக்குநர் இந்த வாரம் காப்பி அடிச்சிட்டார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

  ஆரி சிக்குவார்

  ஆரி சிக்குவார்

  அடுத்த வாரம் நாமினேஷனில் அன்பு கேங் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் நிச்சயம் ஆரியை மீண்டும் நாமினேட் செய்வார்கள். மறுபடியும் தேவைப்படும் போது தேவையான அளவு ஒரு சண்டை இதைவிட பயங்கரமாக வெடிக்க வாய்ப்பிருக்கிறது. இன்னும் இரண்டு வாரத்தில் முடிவடைவதால், எப்போ சண்டை போட வைக்கணும், எப்போ நியூ இயர் கேக் வெட்டி ஆடி பாட வைக்கணும்னு பிக் பாஸுக்கு நல்லாவே தெரியும்.

  English summary
  Netizen slammed Balaji Murugadoss and Aari fight was a fully scripted one and BB program creators looted it from Vivekh and Mayilsamy samiyar comedy.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X