twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விமர்சகர்கள் எல்லாம் மகாத்மா காந்தியோ, அன்னை தெரசாவோ கிடையாது.. அந்த வீடியோவையும் வெளியிட்ட பாலா!

    |

    சென்னை: விருதை திருப்பிக் கொடுத்த பாலாஜி முருகதாஸ், அதோடு நிறுத்தாமல் அது தொடர்பாக வரிசையாக ட்வீட்களையும் போட்டு வெளுத்து வருகிறார்.

    Recommended Video

    Balaji Murugadoss and Behindwoods Issue | Character Assassinate பண்ணாதீங்க

    பிக் பாஸ் போட்டியாளர்களை யூடியூப் சேனல்கள் மோசமாக விமர்சிப்பது குறித்து பிஹைண்ட்வுட்ஸ் மேடையிலேயே பாலாஜி முருகதாஸ் பேசி உள்ளார்.

    தாத்தாவின் தோள் மீது ஒய்யார ஆட்டம்... பேரக்குழந்தைகளுடன் விளையாடும் சத்யராஜ் !தாத்தாவின் தோள் மீது ஒய்யார ஆட்டம்... பேரக்குழந்தைகளுடன் விளையாடும் சத்யராஜ் !

    அவர் பேசிய வீடியோ சமீபத்தில் ஒளிபரப்பான அந்த விருது நிகழ்ச்சி வீடியோவில் 'கட்' செய்யப்பட்டது பாலாவை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.

    விருது வேண்டாம்

    விருது வேண்டாம்

    இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாலாஜி முருகதாஸ் உங்க விருதே வேண்டாம் என திருப்பித் தர முடிவு செய்துள்ளார். அது தொடர்பாக பாலாஜி முருகதாஸ் போட்டுள்ள ட்வீட் சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

    மோசமான விமர்சனம்

    மோசமான விமர்சனம்

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்து மிகவும் மோசமான மீம்களும், ட்ரோல்களும் சமூக வலைதளங்களில் அந்த நிகழ்ச்சி முடியும் வரை குவிந்து வருவது வாடிக்கையாகி விட்டது. பிக் பாஸ் பிரபலமான அர்ச்சனாவின் மகள் மோசமான விமர்சனங்களை முன் வைக்க வேண்டாம் என பிக் பாஸ் கொண்டாட்டத்தின் போது கோரிக்கை விடுத்திருந்தார்.

    அடையாளம் தெரியும்

    அடையாளம் தெரியும்

    ஃபேக் ஐடியில் மோசமான பதிவுகளை வெளியிடும் நபர்கள் குறித்து யாருக்கும் தெரியாது என எண்ண வேண்டாம், அவர்களின் எழுத்துக்கள் மூலமே அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என டைட்டில் வின்னரான ஆரியும் எச்சரிக்கை விடுத்தார். அனிதா சம்பத்தும் ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

    இப்படி பண்ணாதீங்க

    இப்படி பண்ணாதீங்க

    இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலான பிஹைண்ட்வுட்ஸ் பாலாஜி முருகதாஸுக்கு விருது வழங்கியது. அப்போது விழா மேடையில், பிக் பாஸ் போட்டியாளர்களை மிகவும் மோசமாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்கிற கோரிக்கையை முன் வைத்து பேசி இருந்தார்.

    வெட்டித் தூக்கிட்டாங்க

    வெட்டித் தூக்கிட்டாங்க

    சமீபத்தில் தொலைக்காட்சியில் அந்த விருது விழா நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது பாலா பேசிய அந்த 2 நிமிட வீடியோ வெட்டித் தூக்கப்பட்டிருந்தது. இதனால் அப்செட்டான பாலா, தான் அந்த விருதையே திருப்பித் தருவதாக கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

    காந்தியோ தெரசாவோ இல்லை

    காந்தியோ தெரசாவோ இல்லை

    விருதை திருப்பித் தருவதாக பாலா அறிவித்த நிலையில், அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அந்த விழாவில் நான் ஏதும் தப்பா பேசல, தன்னை போன்ற பிக் பாஸ் பிரபலங்களை காலி பண்ணும் நோக்கில் விமர்சிக்காதீங்க, இது எதிர்கால போட்டியாளர்களையும் பாதிக்கும். மற்றும் விமர்சிக்கும் அனைவரும் மகாத்மா காந்தியோ, அன்னை தெரசாவோ இல்லை என வெளுத்து வாங்கி உள்ளார்.

    அந்த வீடியோ

    மேலும், இதுதான் அந்த நிகழ்ச்சியில் தான் பேசிய வீடியோ, இதைத்தான் அவர்கள் கட் செய்து விட்டனர் என ரசிகர் ஒரு செல்போன் கேமராவில் எடுத்த வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளார் பாலாஜி முருகதாஸ்.

    ரசிகர்கள் ஆதரவு

    ரசிகர்கள் ஆதரவு

    பாலாஜி முருகதாஸ் தவறாக ஒன்றும் பேசவில்லை என்றும், தனக்காக அவர் வாதிட்டுள்ளார். மேலும், பிக் பாஸ் என்றாலே பிரபலங்கள் தெறித்து ஓட இது போல சமூக வலைதளங்களில் குவியும் ட்ரோல்களும் விமர்சனங்களும் தான் காரணம் என ஏகப்பட்ட ரசிகர்கள் பாலாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Bigg Boss Tamil 4 contestant Balaji Murugadoss shares the deleted video and slams the youtube channel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X