BB Ultimate Tittle Winner: பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் யார் தெரியுமா? செம ட்விஸ்ட்!

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங் நேற்று நடைபெற்றது. இன்று மாலை ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் அல்டிமேட் முதல் சீசனின் வெற்றியாளர் யார் என்கிற தகவல் கசிந்துள்ளது.

மேலும், ரன்னர் அப்பில் நடந்த செம சுவாரஸ்யமான ட்விஸ்ட் தான் இன்றைய நிகழ்ச்சியை ரசிகர்கள் காண வைக்கும் என்பது கன்ஃபார்ம்.

பாட்ஷா ரஜினி போல

பாட்ஷா ரஜினி போல

நடிகர் சிம்பு ஒயிட் அண்ட் ஒயிட் கோட் அணிந்து பாட்ஷா படத்தின் ரஜினி போல செம ஹேண்ட்ஸம் ஆக கெத்தாக பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார். மொத்தம் 70 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபைனல் போட்டியாளர்கள்

ஃபைனல் போட்டியாளர்கள்

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கடைசியாக தாமரை, பாலாஜி முருகதாஸ், நிரூப் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய 4 பேர் மட்டுமே இருந்தனர். பிக் பாஸ் சீசன் 5ல் ஃபைனல்ஸில் பங்கேற்ற நிரூப் இந்த முறையும் கடைசி நாள் வரை உள்ளே இருந்துள்ளார். மேலும், தாமரை இந்த முறை ஃபைனல்ஸை சந்தித்துள்ளார்.

கமல் பங்கேற்கவில்லை

கமல் பங்கேற்கவில்லை

பிக் பாஸ் தமிழ் முதல் சீசன் தொடங்கி 5 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் அமர்க்களமாக ஆரம்பித்த நடிகர் கமல், தனது படத்தின் படப்பிடிப்பு இதனால் பாதிப்பதாக கூறி பாதியிலேயே வெளியேறி விட்டார். அவரை தொடர்ந்து நடிகர் சிம்பு படப்பிடிப்பையும், பிக் பாஸையும் ஒருங்கே கவனித்து நடத்தி வந்தார். கிராண்ட் ஃபினாலேவில் கமல் பங்கேற்பார் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

டைட்டில் வின்னர் யார்

டைட்டில் வின்னர் யார்

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலுக்கு மிக அருகே சென்று ரன்னர் அப் ஆன பாலாஜி முருகதாஸ் தான் இந்த பிக் பாஸ் அல்டிமேட் முதல் சீசன் டைட்டிலை தட்டித் தூக்கி உள்ளார். நடிகர் ஆரி அர்ஜுனனுக்கு இம்முறை அழைப்பு விடுத்தும் அவர் பங்கேற்க முடியவில்லை எனக் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரன்னர் அப் ரம்யா பாண்டியன் இல்லை

ரன்னர் அப் ரம்யா பாண்டியன் இல்லை

வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த ரம்யா பாண்டியன் நிகழ்ச்சியின் போக்கையே டோட்டலாக மாற்றி டைட்டில் வின்னரே தான் தான் என்கிற ரேஞ்சுக்கு ரசிகர்கள் பலத்தை அதிகரித்து செம மாஸ் காட்டினார். ஆனால், இந்த முறை டைட்டில் வின்னர் மட்டுமின்றி ரன்னர் அப் ஆக கூட ரம்யா பாண்டியன் ஆகவில்லை.

செம ட்விஸ்ட்

செம ட்விஸ்ட்

பாலாஜி முருகதாஸ் டைட்டிலை வென்ற நிலையில், தாமரை செல்வி ரன்னர் அப் ஆவாரா? அல்லது ரம்யா பாண்டியன் ரன்னர் அப் ஆவாரா? என எதிர்பார்த்த நிலையில், அதிக ஓட்டுக்களை அள்ளி செம ட்விஸ்ட்டாக நிரூப் நந்தகுமார் நடிகர் சிம்புவுடன் கை கோர்த்து மேடை ஏறி கடைசியில் டைட்டிலை தவற விட்டாலும் இந்த முறை ரன்னர் அப் ஆகி விட்டார். அடுத்த பிக் பாஸ் அல்டிமேட் சீசன் ஆரம்பித்தாலும் மனுஷன் வந்து போட்டிப் போட்டு வின்னர் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X