உச்சக்கட்ட வாக்குவாதம்.. ஆரியிடம் காலை நீட்டி.. செருப்பை கழட்டிய பாலாஜி.. கண்டிப்பாரா கமல்?

சென்னை: பிக்பஸ் நிகழ்ச்சியில் ஆரியிடம் பாலாஜி காலை நீட்டிபேசி தகாத முறையில் நடந்து கொண்டது ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களையும் பதற வைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பாலாஜி ஆரியிடம் வீணாக வம்பிழுத்ததும் மொத்த ஹவுஸ்மெட்ஸையும் அவருக்கு எதிராய் திருப்பியதும் வெளிப்படையாக தெரிந்தது.

தேவையில்லாத ஒரு விஷயத்தை பேசி ஆரி நேர்மையில்லை என்று கூறினார். அந்த விஷயம் முடிந்த பிறகும் கூட கார்டன் ஏரியாவில் அமர்ந்து சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் ஆரி குறித்து தவறாக பேசிக் கொண்டிருந்தார்.

மோசமான பாடி லாங்குவேஜ்

மோசமான பாடி லாங்குவேஜ்

மோசமான பாடி லாங்குவேஜில் வெறுப்பேற்றினார் பாலாஜி. இதனால் கடுப்பான ஆரி நீ என்னைப்பற்றி பேசாதே என்று கூற கையை நீட்டி பேசாதீங்க, கையை நீட்டி பேசினால் நான் வேற எதையாவது நீட்டி பேசுவேன் என்றார்.

ரம்யா நமட்டு சிரிப்பு

ரம்யா நமட்டு சிரிப்பு

அதற்கு ஆம்பளையா இருந்தா பண்ணிப்பார் என்று ஆரி கூற, பாலாஜி கேவலமான பாடி லாங்குவேஜுடன் மோசமாக நடந்து கொண்டார். இருவருக்கும் இடையே கார்டன் ஏரியாவில் நடந்த சண்டையை பார்த்த ரம்யா நமட்டு சிரிப்பு சிரித்தார். அந்த சண்டையை எஞ்சாய் பண்ணினார் ரம்யா.

ஆரி பேசியது மட்டும்

ஆரி பேசியது மட்டும்

சம்யுக்தா பாலாஜிக்கு ஆதரவாக பேசினார். ரமேஷ் வழக்கம் போல் வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்தார். வாக்குவாதம் அதிகரிக்க, பாலாஜியை உள்ளே அழைத்து சென்றனர் ஹவுஸ்மெட்ஸ். அப்போது, அர்ச்சனா என்ன நடந்தது என்று கேட்க கையை நீட்டி பேசாதீங்கன்னு சொன்னா என்ன ஆம்பளையான்னு கேட்கிறார் என ஆரி பேசியதை மட்டும் சொன்னார்.

காலை நீட்டி செருப்பை கழட்டி

காலை நீட்டி செருப்பை கழட்டி

அதற்கு நீ என்ன சொன்ன, அதையும் சொல்லு என்றார் ஆரி. அப்போது வேற நீட்டி பேசுவேன் என்றார். உடனே ஆரி நீட்டி பேசு என்றார். அவ்வளவுதான், அப்படியே அமர்ந்த பாலாஜி, காலை நீட்டி, செருப்பை கழட்டினார்.

வேடிக்கை பார்த்த அர்ச்சனா

வேடிக்கை பார்த்த அர்ச்சனா

இதனால் மொத்த ஹவுஸ்மேட்ஸும் பதறினர். நிஷா, ரியோ உள்ளிட்டோர் பாலாஜி பிரச்சனை என்றால் பேசு, இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என அட்வைஸ் செய்தனர். ஆனால் அர்ச்சனா, என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்பதை போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கட்டிப்பிடித்த ரியோ

கட்டிப்பிடித்த ரியோ

தொடர்ந்து பெட் ரூமில் இருந்த பாலாஜியிடம் ஏன் அப்படி செய்தாய் என ரியோ கேட்க செருப்பு காலுடன் நீட்டினால் ஒழுக்கமாக இருக்காது, அதனால்தான் செருப்பை கழட்டிவிட்டு நீட்டினேன் என்றார். உடனே பாலாஜியை கட்டிப்பிடித்த ரியோ, செருப்பு காலோட நீட்டுனியா இல்லா செருப்பு இல்லாம நீட்டுனியா என்பது பிரச்சனையில்லை காலை நீட்டியதுதான் பிரச்சனை என்று கூறி சிரித்தார்.

வெளியேற்ற வேண்டும்

வெளியேற்ற வேண்டும்

வயசுக்கு கூட மரியாதை கொடுக்காமல் வார்த்தையாலும் செய்கையாலும் வயதில் மூத்தவர்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார் பாலாஜி. அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரெட் கார்டு கொடுங்கள்

ரெட் கார்டு கொடுங்கள்

பிக்பாஸ் சீசன் 2வில் மும்தாஜிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட மகத்துக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது போல், ஏற்கனவே சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் தவறாக நடந்து கொண்டதற்கும், தற்போது ஆரியிடம் தவறாக நடந்து கொண்டதற்கும் பாலாஜியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X