நாமினேஷனுக்கு வந்ததும் அதிரடி மாற்றம்.. அந்தர்பல்டி அடித்து ஆரியிடம் மன்னிப்பு கேட்ட பாலாஜி!

சென்னை: நாமினேஷனுக்கு வந்ததும் ஆரியை கட்டியணைத்து மன்னிப்பு கேட்டார் பாலாஜி.

Recommended Video

சென்னை: பைனலுக்கு ரெடியாகும் போட்டியாளர்கள்.. நாமினேஷன் ‘நாமம்’ சாத்திய பிக்பாஸ்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆரிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த விஷயம் கடந்த வாரம் நடைபெற்ற ஃபிரீஸ் டாஸ்க்கின் மூலம் ஹவுஸ்மேட்டுகளுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து விவாதித்த ஹவுஸ்மேட்ஸ் ஆரியை கெட்டவராகக் காட்ட தீயாய் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக பாலாஜி படு மோசமாக நடந்து வருகிறார்.

 அடிக்க பாய்ந்த பாலா

அடிக்க பாய்ந்த பாலா

கடந்த வாரம் ஆரியை தரக்குறைவாக பேசி அடிக்க பாய்ந்தார். மைக்கையும் கழட்டி தூக்கியடித்தார். அவரை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதை கொஞ்சமும் கண்டுக்கொள்ளவில்லை.

மன்னிப்பு கேட்க முடியாது

மன்னிப்பு கேட்க முடியாது

இதனால் கமலை கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர் ரசிகர்கள். ஆரியிடம் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கமலிடமே கூறிய பாலாஜி, பின்னர் கன்ஃபெஷன் ரூமில் கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டார்.

மீண்டும் ஷிவானி டாப்பிக்

மீண்டும் ஷிவானி டாப்பிக்

ஆனாலும் சக ஹவுஸ்மேட்ஸிடம் ஆரி குறித்து தவறாக பேசி வந்தார். நேற்றைய எபிசோடிலும் ஆரியிடம் மன்னிப்பு கேட்பது போன்று ஆரம்பித்த பாலாஜி, மீண்டும் ஷிவானியின் டாப்பிக்கை எடுத்தார்.

அவன் இவன்னு பேசுவேன்

அவன் இவன்னு பேசுவேன்

ஆரி ஏற்கனவே சொல்லியும் மீண்டும் நேற்று ஷிவானி டாப்பிக்கை எடுத்தார். அதோடு உங்க பொண்ணா இருந்தா இப்படி பேசுவீங்களா என்று அகேட்ட பாலாஜி, திரும்பவும் அந்த டாப்பிக்கை பேசினால் அவன் இவன் என்று பேசுவேன் என மீண்டும் படு மோசமாக நடந்து கொண்டார்.

வெள்ளிக்கிழமை மன்னிப்பு கேட்டார்

வெள்ளிக்கிழமை மன்னிப்பு கேட்டார்

இதனை பார்த்த ரசிகர்கள் பாலாஜி திருந்தவே மாட்டார். வெள்ளிக்கிழமை வரை சண்டை போட்டு விட்டு வெள்ளிக்கிழமை மாலை ஆரியிடம் மன்னிப்பு கேட்பார் என்று துப்பாத குறையாக திட்டி தீர்த்தனர்.

நாமினேஷனுக்கு வந்ததும் மன்னிப்பு

நாமினேஷனுக்கு வந்ததும் மன்னிப்பு

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டின் கடைசி நாமினேஷன் நடைபெற்றது. பின்னர் அனைவருமே இந்த வாரம் நாமினேஷனில் உள்ளீர்கள் என்று அறிவித்தார் பிக்பாஸ். நாமினேஷன் லிஸ்ட்டுக்கு வந்ததுமே ஆரியை கட்டியணைத்து மன்னிப்பு கேட்டார் பாலாஜி.

அந்தர்பல்டி அடித்த பாலாஜி

அந்தர்பல்டி அடித்த பாலாஜி

நான் உங்களிடம் அவ்வளவு ஹார்ஷாக பேசியிருக்க கூடாது. மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த கோபம் இந்த வயதில் வரும் கோபம்தான், உங்கள் வயதுக்கு வரும் போது நிதானமாகவும் உங்களை விட சிறப்பாகவும் இருக்க முயற்சி செய்கிறேன் என்றும் கூறி அந்தர்பல்டி அடித்தார் பாலாஜி.

யார் வாங்கினாலும் சந்தோஷம்

யார் வாங்கினாலும் சந்தோஷம்

அதற்கு பதில் கூறிய ஆரி, நான் இங்கு கப்பு வாங்க வரவில்லை. நீங்க நினைக்கிறீங்க உங்களையெல்லாம் குறை சொல்லி நான் கப்பு வாங்க பார்க்கிறேன் என்று. நான் நானாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் வந்துள்ளேன். என் கூட சண்டை போட்டு ஜெயிச்சுட்டு கப்பு வாங்கிட்டு போங்க. நீங்க யாரு வாங்கினாலும் எனக்கு சந்தோஷம்தான் என்றார் ஆரி.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

பாலாஜியின் திடீர் மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் அவரை மனல நல மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்றும் பாலாஜி மன்னிப்பு கேட்கிறார் என்றாலே பின்னாடி பெரிய ஆப்பு வைக்கப் போகிறார் என்றும் கூறி வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் நாமினேஷனுக்கு வந்ததும் பாலாஜி மன்னிப்பு கேட்கிறார்.

நடிக்கிறார் பாலாஜி

நடிக்கிறார் பாலாஜி

ஆரிக்கு நல்ல சப்போர்ட் உள்ளது என்பதை அறிந்த பாலாஜி, நாமினேஷனில் இருக்கும் போது ஆரியை பகைத்துக் கொண்டால் ரசிகர்கள் இந்த வாரத்துடன் வெளியேற்றி விடுவார்கள் என்று பயந்து ஆரியிடம் மன்னிப்பு கேட்பது போல் நடிக்கிறார் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X