twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆனந்த் மஹிந்திராவை வறுத்தெடுக்கும் பிரபல நடிகரின் ரசிகர்கள்: முதல்வரிடம் கூட புகார்

    By Siva
    |

    Recommended Video

    பாலகிருஷ்ணா பொலிரோ காரை ஒரு கையால் தூக்கி சாகசம் படைத்தால் வந்த விளைவு

    ஹைதராபாத்: பாலகிருஷ்ணாவை கிண்டல் செய்த மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவை பாலைய்யா ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.

    கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த ஜெய் சிம்ஹா படம் அண்மையில் வெளியானது. அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் பாலகிருஷ்ணா மஹிந்திரா பொலிரோ காரை ஒரு கையில் தூக்குவார்.

    அந்த காட்சியை பார்த்த ஒருவர் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவிடம் ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

    கார்

    பாலகிருஷ்ணா காரை தூக்கிய காட்சி குறித்த ட்வீட்டை பார்த்த ஆனந்த் மஹிந்திரா, ஹா ஹா. பொலிரோ செக்அப் செய்ய இனி நம் ஒர்க்ஷாப்களில் ஹைட்ராலிக் லிப்டுகள் தேவையில்லை என்று பதிலுக்கு ட்வீட்டினார்.

    கோபம்

    கோபம்

    ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்டை பார்த்த பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். படத்தை படமாக பாருங்கள். இந்த கிண்டல் செய்கிற வேலை எல்லாம் வேண்டாம் என்று ஆனந்த் மஹிந்திராவை எச்சரித்துள்ளனர்.

    புகார்

    எங்கள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணாவை அவமதித்ததற்காக ஆந்திராவில் மஹிந்திரா வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணா ஆதரவாளர் ஒருவர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஹேஷ்டேக்

    #boycottmahindra, #BanMahindra ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திராவை வசை பாடி வருகிறார்கள் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள். ஒழுங்கு மரியாதையாக அந்த ட்வீட்டை நீக்கிவிடுங்கள் என்று கூட சிலர் ஆனந்த் மஹிந்திராவிடம் தெரிவித்துள்ளனர்.

    ஜெய் சிம்ஹா

    பாலகிருஷ்ணா மஹிந்திரா பொலிரோ காரை ஒரு கையால் அலேக்காக தூக்கி சாகசம் படைத்த காட்சியின் வீடியோவை நீங்களே பாருங்கள்.

    English summary
    Balakrishna fans are trolling Mahindra group chairman Anand Mahindra who in a lighter tone commented about Balakrishna lifting a Bolero car with one hand in his movie Jai simha directed by KS Ravikumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X