»   »  தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 100 வது படம் கெளதமி புத்தர சாதகர்ணி!

தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 100 வது படம் கெளதமி புத்தர சாதகர்ணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலகிருஷ்ணா படங்கள் பற்றி ஆயிரம் கமெண்டுகள் இருந்தாலும், அவற்றுக்கென்று தனி ரசிகர் கூட்டம் தமிழ் நாட்டிலும் உண்டு.

இப்போது அவரது 100வது படமான கௌதமி புத்திர சாதகர்ணி தமிழிலும் வெளியாகிறது. இந்தப் படம் ஆந்திராவில் 150 கோடிக்கும் மேல் வசூலித்த படம்.

Balakrishna's 100th Movie in Tamil

ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.

இந்த படத்தில் நாயகியாக ஸ்ரேயா நடித்துள்ளார். கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகா சுதாகர் இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ளார்.

அஞ்சனா புத்ர கிரிஷ் இயக்கியுள்ளார். இவர் வேறு யாருமல்ல... சிம்பு நடித்த வானம் படத்தை இயக்கியவர்தான்.

மத்திய பிரதேசம், ஜார்ஜியா, மொராக்கோ போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள உண்மையான அரண்மனைகளில் காட்சிகளைப் படமாக்கியுள்ளார் கிரிஷ். ரூ 100 கோடிக்கும் அதிகமாக செலவழிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள படம் இது.

English summary
N Balakrishna's 100th Telugu movie Gouthami Putra Sathagarni is releasing in Tamil with the same title.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil