»   »  அதே தேதியில் வெளியாகும் படம்.. - பாலகிருஷ்ணாவுக்கு இப்படியொரு சென்டிமென்டா?

அதே தேதியில் வெளியாகும் படம்.. - பாலகிருஷ்ணாவுக்கு இப்படியொரு சென்டிமென்டா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படம் 'ஜெய்சிம்ஹா'. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை நாயகியாக நடிக்க, ஹரிப்ரியா, நடாஷா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பர் 1-ம் தேதி வெளியிடுவதாக தற்போது அறிவித்துள்ளனர். பாலகிருஷ்ணா நடித்த 'கௌதமிபுத்ர சதகர்னி' படம் இந்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வெளியானது.

balakrishna's cinema centiment

அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததையடுத்து தமிழிலும் டப் செய்து வெளியிட்டனர். தமிழில் பெரிய வரவேற்பைப் பெறவில்லையென்றாலும் தெலுங்கில் பெற்ற வெற்றியால் பாலகிருஷ்ணா உற்சாகமானார்.

அந்தப் படத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடித்திருக்கும் 'ஜெய்சிம்ஹா' படத்தையும் 2018-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி வெளியிடுவதாக தற்போது தெரிவித்துள்ளனர். பாலகிருஷ்ணாவின் சென்டிமென்ட் படத்தின் ரிலீஸ் தேதி வரைக்கும் நீள்கிறது.

English summary
KS Ravikumar's film with Balakrishna 'Jaisimha' will be released on January 12th 2018. Balakrishna's 'Gauthamiputra Satakarni' was also released on this same date in this year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil