Don't Miss!
- News
"டேய் எப்புட்றா.." வங்கதேசத்தில் தூங்கிய சிறுவன் எழுந்ததோ மலேசியாவில்.. விபரீதமான விளையாட்டு
- Sports
"இவ்வளவு நாளா இது தெரியலையே.. இஷான் கிஷானுக்கு நிறைய விஷயம் தெரியல".. கவுதம் கம்பீர் கடும் விளாசல்!
- Lifestyle
உங்க குடலில் இந்த பிரச்சினைகள் இருந்தால் உங்களால் உடலுறவில் சரியாக செயல்பட முடியாதாம்...பார்த்து நடந்துக்கோங்க
- Technology
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- Finance
ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வு செய்யவே இல்ல.. எல்லாம் தவறு.. அதானி குழுமம் ஒரே போடு..!
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
Veera Simha Reddy Twitter Review: பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி எப்படி இருக்கு?
சென்னை: நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இன்று வெளியாகி உள்ளது வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம். இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் பாலகிருஷ்ணா டபுள் ஆக்ஷனில் அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அப்பா பாலகிருஷ்ணா தான் வீர சிம்ஹா ரெட்டி. அவருக்கு ஜோடியாக ஹனிரோஸ் நடித்துள்ளார். மகன் பாலகிருஷ்ணாவின் பெயர் ஜெயசிம்ஹா ரெட்டி அவருக்கு ஜோடி இந்த படத்தில் ஸ்ருதிஹாசன்.
வில்லியாக வரலக்ஷ்மி சரத்குமார் மிரட்டி உள்ள இந்த படம் எப்படி இருக்கு என நெட்டிசன்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை இங்கே பார்ப்போம்..
பீஸ்ட்
வீரராகவனை
கூப்பிடுங்க..
தூங்குற
குழந்தையை
அடித்து
எழுப்பும்
பாலகிருஷ்ணா..
ரசிகர்கள்
விளாசல்!

மாஸ் ராம்பேஜ்
பாலகிருஷ்ணா படங்கள் என்றாலே மாஸ் காட்சிகளுக்கு குறைவு இருக்காது. நம்ப முடியாத ஏராளமான மாஸ் காட்சிகளை இந்த படத்திலும் வைத்துள்ளனர். தமனின் தரமான பிஜிஎம் ரசிகர்களை அந்த காட்சிகளில் கூஸ்பம்ப்ஸ் அடைய செய்துள்ளன. ஸ்ருதிஹாசன் சூப்பரா இருக்காரு என்றும் வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் பக்காவாக நடித்துள்ளனர் என இந்த ரசிகர் பாராட்டி உள்ளார்.

டார்ச்சர்
மோசமான ஸ்க்ரீன் பிளேவில் உருவாகி உள்ள வழக்கமான அரைத்த மாவு பாலய்யா படத்தின் கதை தான் இந்த வீர சிம்ஹா ரெட்டி படமும் என இந்த ரசிகர் செகண்ட் ஹாஃப் எல்லாம் ரொம்ப டார்ச்சருங்க படம் அவ்ளோ தான் என்றும் பொங்கல் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது இந்த படம் என துவைத்து தொங்கப்போட்டுள்ளார்.

2 மார்க்கே ஜாஸ்தி
அமெரிக்காவில் படத்தை பார்த்து விட்டேன் இந்த படத்துக்கு வெறும் 2 ரேட்டிங் தான் என இந்த ரசிகர் முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட்டே பயங்கர கடுப்பில் இப்படியொரு கமெண்ட்டை போட்டுள்ளார். வெளிநாடு தியேட்டர் ஒன்றில் பாலய்யா ரசிகர்கள் பண்ண சம்பவத்தால் படத்தின் காட்சியை தியேட்டர் ஊழியர்கள் நிறுத்தி விட்ட கிளாஸ் வீடியோ டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஓவர் ஆக்ஷன்
பாலய்யா காரை காலால் எட்டி உதைக்கும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் என்னடா இது ஓவர் ஆக்ஷனா இருக்கே என ட்ரோல் செய்து வருகின்றனர். சில மீடியாக்கள் இந்த படத்துக்கு 2க்கும் குறைவாக 1 ரேட்டிங் எல்லாம் கொடுத்து மரண சம்பவம் செய்துள்ளனர். அகண்டா அளவுக்கு இந்த படம் இல்லை என கமெண்ட்டுகள் குவிகின்றன.