»   »  இவர் என்ன நடிகரா இல்ல ஸ்லாப் மாஸ்டரா?: அந்த கொடுமை வீடியோவை நீங்களே பாருங்க

இவர் என்ன நடிகரா இல்ல ஸ்லாப் மாஸ்டரா?: அந்த கொடுமை வீடியோவை நீங்களே பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

அனந்தபூர்: நடிகரும், தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

நடிகரும், தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா தனது ரசிகர்களை சப்பு சப்புன்னு அறைய பெயர் போனவர் ஆகிவிட்டார். அவர் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியான ஹிந்துபூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வீடு வீடாக சென்று அவர் பிரச்சாரம் செய்தார்.

ரசிகர்

ரசிகர்

பிரச்சாரம் செய்தபோது ரசிகர் ஒருவர் அவரை உரசியபடி செல்ல பாலகிருஷ்ணா கடுப்பாகி அவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு எதுவும் நடக்காதது போல் இருந்துவிட்டார்.

வீடியோ

பாலகிருஷ்ணா தனது ரசிகர் ஒருவரை அறைந்தபோது எடுத்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் பாலகிருஷ்ணாவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

செல்பி

செல்பி

முன்னதாக தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை ஓங்கி அறைந்தார் பாலகிருஷ்ணா. திருப்பதி கோவிலுக்கு சென்றபோதும் கூட செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை அறைந்தார் பாலகிருஷ்ணா.

உதவியாளர்

உதவியாளர்

படப்பிடிப்பு தளத்தில் பாலகிருஷ்ணா தனது உதவியாளரை அறைந்து தனது காலணிகளை கழற்றுமாறு கூறினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tollywood star cum Telugu Desam Party MLA Nandamuri Balakrishna has slapped yet another fan in Andhra Pradesh.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil