Don't Miss!
- News
சென்னை மக்களே கவனம்! மெட்ரோ பணிகள்! அடுத்த 10 நாட்களுக்கு இந்த முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்
- Technology
அட்டகாசமான வடிவமைப்புடன் இந்தியாவில் களமிறங்கும் கோகோ கோலா போன்: அறிமுகம் தேதி இதுதான்.!
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த கொடுமையை எல்லாம் பார்க்கணுமா..? வீர சிம்ஹா ரெட்டி பாலய்யாவுக்கு ரிவீட் அடித்த ப்ளு சட்டை
சென்னை:
தெலுங்கில்
பாலகிருஷ்ணா
நடித்துள்ள
வீர
சிம்ஹா
ரெட்டி
திரைப்படம்
நேற்று
வெளியானது.
நந்தமுரி
பாலகிருஷ்ணாவின்
107வது
படமான
இதனை
கோபிசந்த
மலினேனி
இயக்கியுள்ளார்.
பாலகிருஷ்ணா
ஜோடியாக
ஸ்ருதி
ஹாசனும்
முக்கியமான
கேரக்டரில்
வரலட்சுமி
சரத்குமாரும்
நடித்துள்ளனர்.
இந்நிலையில்,
வீர
சிம்ஹா
ரெட்டி
படம்
எப்படி
உள்ளது
என
ப்ளு
சட்டை
மாறன்
விமர்சனம்
செய்துள்ளார்.
பீஸ்ட்
வீரராகவனை
கூப்பிடுங்க..
தூங்குற
குழந்தையை
அடித்து
எழுப்பும்
பாலகிருஷ்ணா..
ரசிகர்கள்
விளாசல்!

பாலய்யாவின் வீர சிம்ஹா ரெட்டி
தெலுங்கு மாஸ் நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பாலய்யாவுடன் ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார், ஹனி ரோஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பாலய்யாவின் வழக்கமான ஆக்சன் மசாலாவுடன் வெளியாகியுள்ள இந்தப் படத்தை டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ப்ளு சட்டை விமர்சனம்
இந்தப் படத்தில் கேங்ஸ்டர் அப்பா, லவ்வர் பாய் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் பாலய்யா. காதலுக்காக தன் அப்பா யார் என தெரிந்துகொள்ளும் மகன், அவரை போட்டுத்தள்ள முயலும் எதிரிகள் பற்றியும் அறிந்துகொள்கிறார். அப்பா கேரக்டரில் நடித்துள்ள பெரிய பாலகிருஷ்ணாவை, வில்லன் 30 வருடங்களாக கொலை செய்ய முயற்சிக்கிறாராம். அது ஏன்? அதன்பின்னர் என்ன ஆனது என்பது தான் கதை. படத்தோட ஆரம்பம் அசத்தலா இருந்தாலும், அடுத்தடுத்து செம்ம மொக்கையாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.

பாலய்யாவும் மொரட்டு வில்லனும்
மேலும், வீர சிம்ஹா ரெட்டி கதைக்களம் ஆந்திரா வெளிநாடு என இரண்டு ஏரியாவில் பயணிக்கிறது. இந்தப் படத்தில் வில்லன்கள் ரொம்ப் டெர்ரராக இருந்தாலும், இரண்டு பாலய்யா காருவும் சேர்ந்து வில்லன்களை மொரட்டு அடி அடிப்பதாக கூறியுள்ளார். மொத்தம் 10 ஃபைட்டு, அந்த பத்துலயும் பாலய்யா மட்டும் தான் மாஸ் காட்டுகிறார். படத்துல எந்த இடத்துலயும் சீரியஸ்னஸ் இல்ல, பஞ்ச் டயலாக் எதுவும் மனசுல ஒட்டவேயில்லை. பாலய்யாவின் மேஜிக் இதில் சுத்தமாக மிஸ்ஸிங் என்றும் விமர்சித்துள்ளார்.

இதுதான்யா பெரிய கொடுமை
அதேபோல் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ருதி ஹாசனை கூட மன்னித்துவிடலாம், ஆனால் பாலய்யாவின் அம்மாவாக நடித்தவருக்கு 25 வயது தான் இருக்கும். அதைவிட கொடுமை பாலய்யாவிற்கு அத்தையாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இந்த கொடுமையை எல்லாம் ஸ்கீரின்ல பார்க்க சகிக்கல. ஆக்ஷன் காட்சிகளிலும் பாலய்யா வழக்கம் போல பத்து கத்திக் குத்து வாங்கியும் ரத்தம் வடிய வடிய பஞ்ச் டயலாக் பேசுகிறார். இதெல்லாம் ரொம்பவே ஓவராக உள்ளது. சூப்பர் மேன் வரிசையில் பாலய்யாவும் ஒரு ஸ்பெஷல் பவர்மேன் தான். இருந்தும் பாலய்யாவின் பெர்பாமன்ஸ் பத்தல என விமர்சனம் செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.