»   »  சசிகுமார் படத்துக்கு இந்த கதியா? புலம்பும் தியேட்டர்காரர்கள்!

சசிகுமார் படத்துக்கு இந்த கதியா? புலம்பும் தியேட்டர்காரர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சசிகுமார் என்றால் பாக்ஸ் ஆபீஸில் ஒரு மரியாதை இருந்தது. இவர் படத்தை ரிலீஸ் செய்தால் குறைந்தபட்சம் நஷ்டத்திலிருந்தாவது தப்பிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

சசிகுமார் படத்துக்கான ஓபனங்கும் டீசன்டாகத்தான் இருக்கும். இந்த மரியாதை, நம்பிக்கை அனைத்தையும் குழியில் தள்ளி மண்ணை மூடிவிட்டது பலே வெள்ளையத் தேவா.

Bale Vellaya Theva Box Office report

சசிகுமாருக்கு இருக்கும் ஓபனிங்கை வைத்து காசு பார்த்துவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கையில் 50 நாட்களில் 'சுருட்டி' வந்து ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள் பவெதே படத்தை.

சசிகுமார் நடித்த படங்களில் அதிக தியேட் டர்களில் ரீலீஸ் ஆன படம் இதுதான். கிட்த்தட்ட 300 அரங்குகள். சசிகுமார் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகன் "பலே வெள்ளையத் தேவா" படம் பார்த்து விட்டுதான் ஏமாற்றப்பட்டதாக புலம்பியதை தியேட்டர்களில் பார்க்க முடிந்தது என்றார் தியேட்டர் மேனேஜர் ஒருவர்.

சசிகுமாரிடம் இது போன்ற உப்புமா டைப்பான சுருட்டப்பட்ட படங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார் சென்னை காசி தியேட்டரில் குடும்பத்துடன் படம் பார்த்து விட்டு வந்த குடும்ப தலைவர் மணிராஜ். முதல் நாள் சுமார் 3 கோடி வசூலிக்கும் சசிக்குமார் படங்கள். ஆனால் "பலே வெள்ளையதேவா"முதல் நாள் வசூல் சுமார் 1 கோடிக்கும் குறைவு என்கிறது விநியோகஸ்தர்கள் வட்டாரம் முதல் மூன்று நாட்கள் வசூல் சுமார் 2 கோடிக்கும் குறைவுதானாம்.

English summary
Here is the box office report of Sasikumar's Bale Vellaya Theva

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil