Balti Box Office: பாக்ஸ் ஆபீஸில் படுத்தேவிட்ட பல்டி.. பாயவில்லை.. முதல் நாள் மொத்தமே இவ்ளோ தானா?
சென்னை: பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் தென்னிந்தியா முழுவதுமே மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஷேன் நிகாமின் 25வது படமான பல்டி திரைப்படம் நேற்று வெளியான நிலையில், பாக்ஸ் ஆபீஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகாம், சாந்தனு, செல்வராகவன், ப்ரீத்தி அஸ்ரானி, அல்போன்ஸ் புத்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் செப்டம்பர் 26ம் தேதி பல்டி திரைப்படம் வெளியானது. இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்து சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

சாய் அபயங்கருக்கே இந்த படத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அந்த அளவுக்காவது பல்டி திரைப்படம் முதல் வாரத்தில் வசூல் ஈட்டுமா என்பது சந்தேகம் தான் என அதிர்ச்சியை கிளப்புகின்றனர்.
275 கோடி வசூலித்த லோகா: மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியான பல படங்க 200 கோடி வசூலை அசால்ட்டாக கடந்துள்ளன. மோகன்லாலின் எம்புரான் மற்றும் தொடரும் படங்கள் 200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டின. லோகாவுடன் போட்டியாக வெளியான ஹிருதயப்பூர்வம் திரைப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் சாதனையை படைத்துள்ளது. தென்னிந்தியாவிலேயே அதிக வசூல் வேட்டையை நடத்திய உமன் சென்ட்ரிக் படமாக லோகா 275 கோடி வசூலை கடந்துள்ளது என்கின்றனர்.
பல்டி முதல் நாள் வசூல்: ஏகப்பட்ட தமிழ் நடிகர்களை வைத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவான பல்டி திரைப்படம் நேற்று வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், படம் ஓரளவுக்கு வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் நாளில் மலையாள வெர்ஷனில் வெளியான பல்டி திரைப்படம் 44 லட்சம் ரூபாயும் தமிழில் வெறும் 4 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக சாக்னிக் வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் நாளில் பல்டி திரைப்படம் இந்தியாவில் வெறும் 48 லட்சம் தான் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சமீபத்தில், கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் வெளியான கிஸ் படமும் முதல் நாளில் 40 லட்சத்துக்கும் மேல் தான் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

சாய் அபயங்கருக்கே பெரிய சம்பளம்: சாய் அபயங்கர் தமிழில் கருப்பு, அட்லி - அல்லு படம், பிரதீப் ரங்கநாதனின் டூட், கார்த்தியின் மார்ஷல், ராகவா லாரன்ஸின் பென்ஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பல்டி படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான சாய் அபயங்கருக்கு இந்த படத்திற்காக 2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக சமீபத்தில் படக்குழு தகவல் வெளியிட்டு இருந்த நிலையில், அவரது சம்பளம் அளவுக்காவது படம் வசூல் செய்யுமா? என்றும் முதல் நாளே பெரிதாக ஓடவில்லையே என ட்ரோல்கள் பறந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











