twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலுமகேந்திரா - இளையராஜா கூட்டணியின் தலைமுறைகள் படத்துக்கு யு!

    By Shankar
    |

    சென்னை: ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பாலு மகேந்திரா - இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள தலைமுறைகள் படத்துக்கு சென்சார் குழு யு சான்று வழங்கியுள்ளது.

    இயக்குனர் சசிகுமார் தயா‌ரிப்பில் 'தலைமுறைகள்' என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலுமகேந்திரா. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

    2005-ல் தனுஷ் - ப்ரியாமணி நடித்த அது ஒரு கனாக் காலம் படத்துக்குப் பிறகு, ராஜேஷ்வருக்காக ஒரு படம் இயக்கவிருந்தார் பாலு மகேந்திரா. ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டது. உடல் நிலை போன்ற காரணங்களால் அவர் புதுப்படம் இயக்குவதை தள்ளிப் போட்டு வந்தார்.

    Balu Mahendra's Thalaimuraigal gets U

    7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் புதிய படம் இயக்குகிறார் பாலுமகேந்திரா.

    இப்படம் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கம்போல நிறைய புதுமுகங்களுக்கும் வாய்ப்பு தந்துள்ளார் பாலு மகேந்திரா.

    படப்பிடிப்பு முடிந்து, சான்றிதழுக்காக சென்சாருக்கு படத்தைப் போட்டுக் காட்டினர். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், எந்த கட்டும் இல்லாமல் இப்படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

    English summary
    Balu Mahendra's Thalaimuraigal has got U certificate from the Censor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X