»   »  ரவிதேஜா- அஞ்சலி- ஸ்ருதி நடிக்கும் எவன்டா... இது தெலுங்கு 'பலுபு'!

ரவிதேஜா- அஞ்சலி- ஸ்ருதி நடிக்கும் எவன்டா... இது தெலுங்கு 'பலுபு'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்கு ஹீரோக்கள் வரிசையாக தமிழில் ஆழம் பார்க்கும் காலமிது. மகேஷ்பாபுவைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கால் பதிக்க பொருத்தமான வாய்ப்பு தேடுகிறார் நடிகர் ரவிதேஜா.

நேரடித் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கும் முன் ஒரு டப்பிங் படத்தை விட்டு வெள்ளோட்டம் பார்க்கிறார். அந்தப் படம் எவன்டா.

பலுபு

பலுபு

இது 2013-ல் வெளியான பலுபு படத்தின் ரீமேக். இந்த படத்தில் ரவிதேஜா நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக ஸ்ருதிஹாசன், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். ராய் லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தா, ஜெய் ஜெயபிரகாஷ், ஆதித்யா மேனன், பரமாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

கோபிசந்த்

கோபிசந்த்

ஒளிப்பதிவு - வின்சென்ட், இசை - எஸ்.எஸ்.தமன், பாடல்கள் - அருண்பாரதி, திருமலை சோமு, வடிவரசு, மீனாட்சி சுந்தரம். கதை - கோனா வெங்கட், கே.எஸ்.ரவீந்திரா. திரைக்கதை, இயக்கம் - கோபிசந்த். வசனம், தமிழ் உருவாக்கம் - ARK.ராஜராஜா

காமெடி

காமெடி

படம் பற்றி தமிழ் உருவாக்கம் செய்திருக்கும் A.R.K.ராஜராஜாவிடம் கேட்டோம்...

"இது முழுக்க முழுக்க காமெடி கலாட்ட படம். படம் பார்க்கும் அனைவரும் நிச்சயமாக வயிறு குலுங்க சிரிப்பார்கள். நாயகனுக்கு அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ் தனது மகன் யாரையும் கல்யாணம் செய்ய மறுப்பதால். பிரகாஷ் ராஜே பெண்களிடம் அவரது மகனுக்காக லவ் புரபோஸ் சொல்லி போலீசில் பல முறை அடி வாங்குவார்.

ரவிதேஜா

ரவிதேஜா

அப்படி ஒருமுறை காசுக்காக தினமும் பசங்களை ஏமாற்றும் ஸ்ருதிஹாசனிடம் தனது மகனை காதலிக்குமாறு சொல்ல... அவரும் காதலிப்பது போல் நடிக்க இடையில் ஸ்ருதிஹாசனால் பாதிக்க பட்ட நாயகனின் நண்பன் ஒருவன் அவளைப்பற்றி அணைத்து உண்மைகளையும் சொன்னதால் ரவிதேஜாவும் காதலிப்பது போல் நடிக்கிறார்.

க்ளைமாக்ஸ்

க்ளைமாக்ஸ்

இதற்கிடையில் வில்லன் கும்பல் பிரகாஷ்ராஜையும் ரவிதேஜாவையும் கொல்வதற்காக ஊரெல்லாம் தேடி வருகிறார்கள். இறுதியில் நாயகன் யாரை திருமணம் செய்தார், வில்லன்கள் எதற்காக அப்பா மகனை தேடி வருகிறார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை. காமெடி ஆக்ஷன் படமாக உருவாகிறது எவன்டா," என்றார்.

English summary
Ravi Teja's 2013 action comedy Balupu to be remade in Tamil as Evanda.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil