»   »  ஹாலிவுட் படத்தில் 'பல்வாள்தேவன்'!

ஹாலிவுட் படத்தில் 'பல்வாள்தேவன்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பாகுபலி-2 படத்திற்குப் பிறகு டைரக்டர் ராஜமவுலி இயக்கும் படம் குறித்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், 'பாகுபலி' நாயகனான பிரபாஸ், தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் 'சாஹோ' படத்தில் நடிக்கிறார். 'பாகுபலி' படத்தில் வில்லனாக நடித்த ராணா ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

Balvaldevan in hollywood movie

'பாகுபலி -2', 'காஸி' படங்களுக்குப் பிறகு ராணா நடிப்பில் வெளியான படம் 'நேனே ராஜூ நேனே மந்திரி'. இந்தப் படம் பாகுபலி வரிசைப் படங்களுக்குப் பிறகு ராணாவுக்கு ஹிட்டாக அமைந்தது. தெலுங்கில் வெளியாகியிருக்கும் அந்தப் படம், 'நான் ஆணையிட்டால்' என்ற பெயரில் தமிழில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ராணா நடிக்கும் ஹாலிவுட் படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அந்தப் படத்திற்கு 'விஜ்லி' என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ராணாவுடன் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகையர் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

1984-ல் குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில் உள்ள ஆழமான கடல் பகுதியில் மூழ்கிய ஒரு கப்பலை மையப்படுத்தி 'விஜ்லி' படத்தின் கதை உருவாகியுள்ளதாம். இந்தப் படம் இந்தியாவின் டைட்டானிக் எனும் பெருமையைப் பெறும் என்கிறார்கள்.

English summary
Rana's Hollywood film will be launched shortly. The film is adapted into the real story and is named 'Vijli'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil