twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டேம்-999' படத்திற்கு தமிழகத்தில் மேலும் 2 வாரம் தடை

    By Chakra
    |

    முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து கேரளத்துக்கு ஆதரவாத டேம் 999 என்ற பெயரில் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரியான சோஹன் ராய் என்பவர் எடுத்த படத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து படத்தைத் திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். மேலும் தமிழக அரசும் படத்துக்கு தடை விதித்தது.

    இந் நிலையில் படத்தின் தலைப்பு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை பற்றி மறைமுகமாக எடுத்துக் கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி, தமிழக- கேரள மக்களிடையே வேற்றுமையை உருவாக்கவும், தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாகவும் இந்தப் படம் அமைந்துள்ளதால் 25-11-2011 முதல் இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து சோஹன் ராய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந் நிலையில் தமிழக அரசு விதித்த தடை கடந்த 7ம் தேதியுடன் காலாவதியானதால், தடையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை 8ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு அமலில் இருக்கும்.

    English summary
    The Tamil Nadu government has extended the ban of screening the anti-Tamil and pro-Kerala feature film, Dam 999, for two more weeks starting from Dec 8
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X