»   »  விஐய் ஆண்டனி படங்களுக்கு தடை?

விஐய் ஆண்டனி படங்களுக்கு தடை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகதன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.

வெளி தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க எட்டு கோடி சம்பளம் கேட்கும் இவரிடம்தயாரிப்பு செலவுக்கு 6 கோடியையும் கொடுத்தால் முதல் பிரதி அடிப்படையில் படம் எடுத்து கொடுப்பார் விஜய் ஆண்டனி.

இவரது நடிப்பில் வெளியான கடைசி படம் அண்ணாதுரை. இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை 6.50 கோடிக்கும், கேரள உரிமையை 32 லட்சத்திற்கும் அலெக்சாண்டர் என்பவர் வாங்கினார், விஐய் சேதுபதி நடிப்பில் தயாரான கருப்பன் படத்தை ஏற்கெனவே வாங்கி ரீலீஸ் செய்திருந்தார்.

திணறல்

திணறல்

அண்ணாதுரைபடம் வெளியான முதல் நாளே வசூலில் மூச்சு திணறியது. தமிழ்நாட்டில் 2.50 கோடி மட்டும் வசூல் செய்த அண்ணாதுரை 4 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் 10 லட்சம் வசூல் செய்து 22 லட்சம் நஷ்டத்தை உண்டாக்கியிருக்கிறது.

நம்புங்க

நம்புங்க

அண்ணாதுரை படம் பார்த்து விட்டு விலை பேசலாம் என கூறிய அலெக்சாண்டரிடம், "என்னை நம்புங்கள்" எதுவென்றாலும் நான் பொறுப்பு," என்று விஜய் ஆண்டனி கூறியதை நம்பி படத்தை வாங்கினார் அலெக்சாண்டர்.

முடியாது முடியாது

முடியாது முடியாது

அண்ணாதுரை ரீலீசுக்கு பின் வசூல் கணக்குகளுடன் விஜய் ஆன்டணியை சந்தித்த அலெக்சாண்டரிடம், "நஷ்ட தொகையை திரும்ப கொடுக்க முடியாது. முதல் பிரதி அடிப்படையில் இன்னொரு படம் நடித்து தருகிறேன்," என வி ஆன்டணி கூறியுள்ளார்.

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்

"நீங்கள் கூறுவது போல் 14 கோடி செலவு செய்து படம் எடுத்தால் வியாபாரம் ஆகாது. நீங்க நடிச்ச படத்தில் பிச்சைகாரன் மட்டும்தான் அதிகமாக (7 கோடி) வசூல் செய்த படம். இதுதான் உங்களோட ஒரிஜினல் மார்கெட். இதனை கவனத்தில் கொள்ளாமல் எட்டு கோடி சம்பளம், 14 கோடியில் முதல் பிரதி ரீலீஸ், செலவு 5 கோடி. ஆக மொத்தம் 19 கோடியை நீங்கள் நடிக்கும் படம் வசூல் செய்யும் சாத்தியம் இல்லை," என்று கூறியும் விஜய் ஆண்டனி ஏற்பதாக இல்லை.

தடை

தடை

நான்கு கோடி நஷ்டத்தை திருப்பிக் கொடுக்க பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை. வேறு வழியின்றி அண்ணாதுரை படத்தின் விநியோக உரிமை வாங்கிய விநியோகஸ்தர்கள் ஒன்று கூடி விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து இனி வெளிவர உள்ள படங்களை வாங்கவும், தியேட்டரில் ரீலீஸ் செய்யவும் தடை விதித்துள்ளனர். அண்ணாதுரையை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளி படத்தில் நடித்து தயாரித்து வருகிறார் விஐய் ஆண்டனி.

English summary
After the flop of Anna Durai, the distributors have decided to ban Vijay Antony's forethcoming movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X