»   »  விஜய்யின் தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை கமிஷனரிடம் புகார்

விஜய்யின் தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை கமிஷனரிடம் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜய்யின் தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் விடுதலை கழகத்தினர் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக மக்கள் விடுதலை கழகம் அமைப்பினர் அளித்துள்ள மனுவில், தஞ்சையை சேர்ந்த குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகரனின் தாகபூமி கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோர் கத்தி படம் எடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Ban Theri! - Complaint filed at Commissioner office

இதனையடுத்து விஜய், முருகதாஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நடிகர் விஜய், முருகதாஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.


மேலும், படைப்பு சுரண்டலில் ஈடுபடும் இயக்குநர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜய் நடிப்பில் தெறி படம் வெளியாக உள்ள நிலையில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே வழக்கும் நடந்து வருகிறது.

English summary
A political outfit named Makkal Viduthalai Kazhagam has filed a complaint against Vijay's Theri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil