»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகைபண்டரிபாயை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

சிறுநீரக கோளாறு காரணமாக பண்டரிபாய் அவதிப்பட்டு வந்தார். இதைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா,அதிமுகவின் அண்ணா அறக்கட்டளை சார்பில் பண்டரிபாயின் அனைத்து சிகிச்சை செலவுகளையும் ஏற்கஉத்தரவிட்டார்.

மேலும், பண்டரிபாயை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும்உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பண்டரிபாய். அங்கு அவருக்குத்தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பண்டரிபாயை ஜெயலலிதா நேற்று மருத்துவமனைக்குச் சென்று பார்த்து அவருடைய உடல் நலம்குறித்து விசாரித்தார்.

விரைவில் குணமடைய தன்னுடைய வாழ்த்துக்களையும், ஆறுதலையும் பண்டரிபாய்க்குத் தெரிவித்தார்ஜெயலலிதா. அவருக்கு பண்டரிபாய் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நடித்துள்ள சில படங்களில் பண்டரிபாயும் நடித்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil