»   »  ‘பெங்களூர் டேஸ்’ ஆர்யா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் இப்போ சிங்கப்பூர் டேஸ்?

‘பெங்களூர் டேஸ்’ ஆர்யா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் இப்போ சிங்கப்பூர் டேஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த "பெங்களூர் டேஸ்" தமிழ் ரீமேக்கில் ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மான், ஃபகத் ஃபாசில், நித்யா மேனன், நஸ்ரியா, நிவின் பவுலி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான படம் "பெங்களூர் டேஸ்".

இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கை " பொம்மரீலு பாஸ்கர் இயக்கவிருக்கிறார். அதற்கான நடிகர், நடிகைகள் யார் என்பது நீண்ட நாளாகவே குழப்பத்தில் இருந்து வந்தது.

விலகிய சமந்தா சித்தார்த்

விலகிய சமந்தா சித்தார்த்

இப்படத்தில் சமந்தா, சித்தார்த் நடிப்பதாக இருந்தது. அவர்களின் காதல் பிரச்னையால் இவர்கள் நடிக்கவில்லை என்ற செய்தி வெளியாகியது.

ஆர்யா – ஸ்ரீதிவ்யா

ஆர்யா – ஸ்ரீதிவ்யா

இறுதியில் பகத் பாசில், நஸ்ரியா, நிவின் பவுலி போன்றவர்களின் கேரக்டர்களில் முறையே ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிக்க உள்ளனர்.

ராணா டகுபதி

ராணா டகுபதி

மேலும் துல்கர் சல்மான் வேடத்தில் ராணா நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யவிருக்கின்றது.

சிங்கப்பூரில் கதை

சிங்கப்பூரில் கதை

சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், பெங்களூரை மையமாக வைத்து மலையாளத்தில் படத்தின் கதை நகரும். அதை மாற்றி சிங்கப்பூரில் நடப்பது போன்று படத்தின் கதையை மாற்றவிருப்பதாகவும், படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் எனவும் இயக்குநர் பொம்மரீலு பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கிருஸ்துமஸ் நாளில்

கிருஸ்துமஸ் நாளில்

இந்தப்படம் மார்ச் 20ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் கிருஸ்துமஸ் நாளில் படம் வெளியாகும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The makers of Bangalore Days remake have almost finalised the cast of lead characters now. It looks like Arya would play the role that was essayed by Fahadh Faasil and Sri Divya as his wife. Initially as mentioned earlier, these roles were supposed to be performed by Siddarth and Samantha, but they walked out of this project due to some reasons

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil