»   »  ஏடிஎம்கே என்று பெயர் வைத்து விட்டு இப்போது தொடை நடுங்கும் படக் குழு!

ஏடிஎம்கே என்று பெயர் வைத்து விட்டு இப்போது தொடை நடுங்கும் படக் குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாளத்தில் நஸ்ரியா, துல்கர், நிவின், பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்ட "பெங்களூரு டேஸ்" திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கின் தலைப்பிற்கு புதிய பிரச்சனை முளைத்துள்ளது.

இந்தப் படத்திற்கு வைத்த பெயரை இப்போது அவசரம் அவசரமாக வேறு பெயருக்கு மாற்ற முடிவு செய்துள்ளனராம். எல்லாம் அவர்கள் வைத்த வில்லங்கமான தலைப்புதான் காரணம்.

ஏண்டா இந்தப் பெயரை வைத்தோம் என்று புலம்பிப் பயப்படும் அவர்கள் வேறு பெயரை யோசித்த வருகின்றனராம்.

பெங்களூர் டேஸ் ரீமேக்

பெங்களூர் டேஸ் ரீமேக்

ஆர்யா, பாபி சிம்ஹா, பார்வதி நடிக்க பாஸ்கர் இயக்கி வரும் படம்தான் "பெங்களூரு டேஸ்" ரீமேக்.

ஏடிஎம்கே

ஏடிஎம்கே

தமிழ் ரீமேக்குக்கு "ஏடிஎம்கே" என்று பெயரிட்டுள்ளனர். அதாவது "அர்ஜுன், திவ்யா மற்றும் கார்த்திக்" என்று பெயர் சூட்டியிருந்தார்கள்.

அச்சச்சோ தப்பாச்சே!

அச்சச்சோ தப்பாச்சே!

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிய உள்ள நிலையில் "ஏடிஎம்கே" என்கிற தலைப்பை ஒரு காதல் படத்துக்கு வைப்பதை முதல்வர் கண்டிப்பாக விரும்பமாட்டார் என்று சிலர் அபிப்ராயம் தெரிவிக்கவே உண்மை நிலை அறிய சில அமைச்சர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தார்களாம்.

தொடர்பு எல்லைக்கு அப்பால்

தொடர்பு எல்லைக்கு அப்பால்

ஆனால் அனைத்து அமைச்சர்களும் டைட்டிலைக் கேட்டவுடன் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிட மேடத்தின் பொல்லாப்பு எதற்கு என்ற முடிவில் டைட்டிலை மாற்றியே தீருவது என்று முடிவெடுத்துவிட்டார்களாம் படக்குழுவினர்.

அதே பெயரையும் வைக்க முடியாது

அதே பெயரையும் வைக்க முடியாது

இந்நிலையில் மலையாளப் படத்தின் பெயரான "பெங்களூரு டேஸ்" என்ற தலைப்பை வைக்கலாம் என்றால் அதுவும் மேற்படி "அவருக்கு" பிடிக்காது என்பதால் புதிய தலைப்பிற்காக மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றார்களாம் படக்குழுவினர்.

எதுக்குப்பா தொடனும்.. அப்புறம் ஏன் சிண்டைப் பிய்ச்சுக்கனும்.

English summary
Bangalore days film's Tamil Remake will change its name soon due to some pressure.
Please Wait while comments are loading...