»   »  ஆர்யா, ராணா, ஸ்ரீதிவ்யாவின் பெங்களூர் நாட்கள்.. குடும்பத்துடன் பார்க்கலாம்

ஆர்யா, ராணா, ஸ்ரீதிவ்யாவின் பெங்களூர் நாட்கள்.. குடும்பத்துடன் பார்க்கலாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, ராணா, சமந்தா, ராய் லட்சுமி மற்றும் பார்வதி ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் பெங்களூர் நாட்கள் படத்திற்கு எந்தவித கட்டும் இல்லாமல் யூ சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கியிருக்கிறது.

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியிருக்கும் படம் பெங்களூர் நாட்கள்.இப்படம் தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவுற்றதைத் தொடர்ந்து படக்குழுவினர் பெங்களூர் நாட்கள் படத்தை தணிக்கைக் குழுவினருக்கு போட்டுக் காட்டினர்.


படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு எந்தக் கட்டும் கொடுக்காமல் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் யூ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.


இந்நிலையில் சற்று முன்னர் வெளியான இப்படத்தின் டிரெய்லர் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.


வருகின்ற பிப்ரவரி 5 ம் தேதி இப்படத்தினை வெளியிட படத்தைத் தயரித்திருக்கும் பிவிபி சினிமாஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.


வெற்றிமாறனின் விசாரணை, பிரசாந்தின் சாஹசம் ஆகிய படங்களுடன் பெங்களூர் நாட்கள் திரைப்படம் மோதுவது குறிப்பிடத்தகது.


பெங்களூர் டேஸ் வரலாற்றை பெங்களூர் நாட்கள் முறியடிக்குமா?

English summary
Arya, Rana, Sri Divya and Bobby Simha Starring Bengalore Naatkal gets Clean U Certificate. This Movie will be Released on February 5th for Worldwide.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil