twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெங்களூர்: பிற மொழி சினிமாவுக்கு எதிர்ப்புபெங்களூர்:கர்நாடகத்தில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டும்என்று கூறிய திரைப்பட வர்த்தக சபையினரின் அலுவலகத்தை கன்னட ரக்ஷா வேதிகே என்றகன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கினர்.தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலப் படங்களால் தான் கன்னடப் படங்கள் ஓடவில்லை என்றும்,இந்தப் படங்களை உடனடியாக ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தி நடிகர் ராஜ்குமார்தலைமையில் பெங்களூரில் ஊர்வலம் நடத்தப்பட்டது.இதையடுத்து முதல்வர் தரம்சிங், மற்ற மொழிப் படங்கள் வெளியாகி 7 வாரங்களுக்குப் பின்னர்தான் பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார்.இதற்கு திரைப்பட வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்கே கூட்டம் வருவதால், அந்தப் படங்களின் ரிலீஸைதள்ளிப் போட்டால், தியேட்டர்களை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்படும் என திரைப்படவர்த்தக சபை கர்நாடக அரசை எச்சரித்துள்ளது.இதனால் பல தியேட்டர் அதிபர்களும் அரசின் உத்தரவையும் மீறி தமிழ், தெலுங்கு புதிய படங்களைவெளியிட்டு வருகின்றனர்.இதனால் ஆத்திரமடைந்துள்ள கன்னட அமைப்புகள் தங்களது வெறித்தனத்தை காட்டஆரம்பித்துள்ளன. நேற்று கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பினர் மெஜஸ்டிக் பகுதியில்உள்ள மூவிலேண்ட் தியேட்டரைத் தாக்கினர். அங்கு தெலுங்குப் படம் ஓடியதால், அதை அடித்துநொறுக்கினர். படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து கெம்ப கெளடா ரோட்டில் உள்ள திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தையும்குமார கிருபா சாலையில் உள்ள வினியோகஸ்தர்கள் அலுவலகத்தையும் அந்த அமைப்பினர் அடித்துநொறுக்கினர்.இந்தத் தாக்குதலையடுத்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிப் படங்கள் ஓடும்தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந் நிலையில் நடிகர் ராஜ்குமாரை முதல்வர் தரம்சிங் அவரது இல்லத்தில் சென்று சந்தித்துப்பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய சிங், கன்னட சினிமா வளர்ச்சிக்கு அரசு எல்லாஉதவிகளையும் செய்யும்.ராஜ்குமார் மனதில் என்ன உள்ளதோ அது சரியானதாகவே இருக்கும். பிற மொழிப் படங்கள் அந்தமாநிலங்களில் வெளியாகி 7 வாரம் கழித்த பின்னரே கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கப்படும்என்றார்.ஆனால், அந்த 7 வாரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழி பேசும் மக்கள் தங்களது மாநிலத்தில்வெளியான புதிய படங்களை கர்நாடகத்தில் விசிடிக்களில் பார்த்து முடித்துவிடுவார்கள், அவர்கள்ஏன் தியேட்டருக்கு வரப் போகிறார்கள் என்று கேட்கிறது திரைப்பட வர்த்தக சபை.அத்தோடு கன்னட படங்களைப் பார்க்க ஆளே வருவதில்லை என்பதால், அரசு என்ன தான் வரிவிலக்கு தந்து, கன்னட படங்களுக்கு டிக்கெட் விலையைக் குறைத்தாலும் தியேட்டர்களை நடத்தமுடியாது என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.பிரச்சனை கன்னட மொழிப் படங்களில் தரத்தில் தான் உள்ளது என்கின்றனர் வினியோகஸ்தர்கள்.தொடர்ந்து மோசமான படங்களே வெளி வருவதால் தான் இந்தப் படங்களை மக்கள்பார்ப்பதில்லை, தமிழ், தெலுங்குக்கு இணையான நல்ல படங்களே கன்னடத்தில் வருவதில்லைஎன்கின்றனர்.அந்தக் குறையைத் தீர்க்காமல் பிற மொழிகளைச் சேர்ந்த படங்களைத் தடுப்பதால் மட்டும் கன்னடசினிமாவை வாழ வைத்துவிட முடியாது என்கின்றனர்.தமிழ், தெலுங்குப் படங்கள் ரூ. 4-8 கோடிகளில் தயாராகும் நிலையில், கன்னட சினிமாக்கள் ரூ. 1கோடிக்கும் குறைவான முதலீட்டிலேயே உருவாக்கப்படுகின்றன. அதில் நடிக்கும் நடிகர்களில்பெரும்பான்மையானவர்களை கர்நாடகத்திலேயே பெரும்பாலனாவர்களுக்குத் தெரியாது என்பதேஉண்மை.

    By Staff
    |

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டும்என்று கூறிய திரைப்பட வர்த்தக சபையினரின் அலுவலகத்தை கன்னட ரக்ஷா வேதிகே என்றகன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கினர்.

    தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலப் படங்களால் தான் கன்னடப் படங்கள் ஓடவில்லை என்றும்,இந்தப் படங்களை உடனடியாக ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தி நடிகர் ராஜ்குமார்தலைமையில் பெங்களூரில் ஊர்வலம் நடத்தப்பட்டது.

    இதையடுத்து முதல்வர் தரம்சிங், மற்ற மொழிப் படங்கள் வெளியாகி 7 வாரங்களுக்குப் பின்னர்தான் பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார்.

    இதற்கு திரைப்பட வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்கே கூட்டம் வருவதால், அந்தப் படங்களின் ரிலீஸைதள்ளிப் போட்டால், தியேட்டர்களை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்படும் என திரைப்படவர்த்தக சபை கர்நாடக அரசை எச்சரித்துள்ளது.

    இதனால் பல தியேட்டர் அதிபர்களும் அரசின் உத்தரவையும் மீறி தமிழ், தெலுங்கு புதிய படங்களைவெளியிட்டு வருகின்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்துள்ள கன்னட அமைப்புகள் தங்களது வெறித்தனத்தை காட்டஆரம்பித்துள்ளன. நேற்று கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பினர் மெஜஸ்டிக் பகுதியில்உள்ள மூவிலேண்ட் தியேட்டரைத் தாக்கினர். அங்கு தெலுங்குப் படம் ஓடியதால், அதை அடித்துநொறுக்கினர். படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து கெம்ப கெளடா ரோட்டில் உள்ள திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தையும்குமார கிருபா சாலையில் உள்ள வினியோகஸ்தர்கள் அலுவலகத்தையும் அந்த அமைப்பினர் அடித்துநொறுக்கினர்.

    இந்தத் தாக்குதலையடுத்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிப் படங்கள் ஓடும்தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந் நிலையில் நடிகர் ராஜ்குமாரை முதல்வர் தரம்சிங் அவரது இல்லத்தில் சென்று சந்தித்துப்பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய சிங், கன்னட சினிமா வளர்ச்சிக்கு அரசு எல்லாஉதவிகளையும் செய்யும்.

    ராஜ்குமார் மனதில் என்ன உள்ளதோ அது சரியானதாகவே இருக்கும். பிற மொழிப் படங்கள் அந்தமாநிலங்களில் வெளியாகி 7 வாரம் கழித்த பின்னரே கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கப்படும்என்றார்.

    ஆனால், அந்த 7 வாரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழி பேசும் மக்கள் தங்களது மாநிலத்தில்வெளியான புதிய படங்களை கர்நாடகத்தில் விசிடிக்களில் பார்த்து முடித்துவிடுவார்கள், அவர்கள்ஏன் தியேட்டருக்கு வரப் போகிறார்கள் என்று கேட்கிறது திரைப்பட வர்த்தக சபை.

    அத்தோடு கன்னட படங்களைப் பார்க்க ஆளே வருவதில்லை என்பதால், அரசு என்ன தான் வரிவிலக்கு தந்து, கன்னட படங்களுக்கு டிக்கெட் விலையைக் குறைத்தாலும் தியேட்டர்களை நடத்தமுடியாது என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

    பிரச்சனை கன்னட மொழிப் படங்களில் தரத்தில் தான் உள்ளது என்கின்றனர் வினியோகஸ்தர்கள்.தொடர்ந்து மோசமான படங்களே வெளி வருவதால் தான் இந்தப் படங்களை மக்கள்பார்ப்பதில்லை, தமிழ், தெலுங்குக்கு இணையான நல்ல படங்களே கன்னடத்தில் வருவதில்லைஎன்கின்றனர்.

    அந்தக் குறையைத் தீர்க்காமல் பிற மொழிகளைச் சேர்ந்த படங்களைத் தடுப்பதால் மட்டும் கன்னடசினிமாவை வாழ வைத்துவிட முடியாது என்கின்றனர்.

    தமிழ், தெலுங்குப் படங்கள் ரூ. 4-8 கோடிகளில் தயாராகும் நிலையில், கன்னட சினிமாக்கள் ரூ. 1கோடிக்கும் குறைவான முதலீட்டிலேயே உருவாக்கப்படுகின்றன. அதில் நடிக்கும் நடிகர்களில்பெரும்பான்மையானவர்களை கர்நாடகத்திலேயே பெரும்பாலனாவர்களுக்குத் தெரியாது என்பதேஉண்மை.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X