Don't Miss!
- News
2023-24ம் ஆண்டு மத்திய பட்ஜெட்.. 5 பெரும் எதிர்பார்ப்புகள் என்னென்ன? வருமான வரி சலுகை இருக்குமா?
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Lifestyle
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புதுச்சேரியில் கடலுக்கு 100 அடியில் பேனர்..அஜித்துனா சும்மாவா..மாஸ் காட்டிய ரசிகர்கள்!
சென்னை : நடிகர் அஜித் குமாரின் 30ஆம் ஆண்டு திரையுலக பயணத்தை முன்னிட்டு கடலுக்கு அடியில் பேனர் வைத்துள்ளனர்.
சினிமா பின்னணி இல்லாமல் வந்து கோலிவுட்டின் முன்னணி நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் அஜித் குமார்.
நடிகர் அஜித் குமார் அற்புதமான திரையுலக வாழ்க்கையின் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து, ரசிகர்கள் சமூக ஊடகங்களின் வழியாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
என்ன ரொம்ப கேவலப்படுத்தினாங்க..சந்தேகப்பட்டாங்க.. விவாகரத்துக்கு காரணம் சொன்ன வி ஜே மகேஸ்வரி!

அஜித் குமார்
1993 ஆம் ஆண்டு, அமராவதி என்ற படத்தில் செல்வா இயக்கத்தில் அஜித் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இப்படத்தை அடுத்து, பாச மலர்கள், விஜய்யுடன் இணைந்து ராஜாவின் பார்வையிலே, பவித்ரா, ஆசை, பிரஷாந்துடன் இணைந்து கல்லூரி வாசல் உள்ளிட்ட பல படங்களின் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஆசை வெற்றியின் மூலம் அனைவரையும் தன் பக்கம் திருப்ப வைத்த பிறகு, அஜீத் தனது இடத்தைப் பிடிக்கத் தவறி சில சராசரி படங்களைத் தந்தார்.

அல்டிமேட் ஸ்டார்
இதையடுத்து, காதல் கோட்டை என்ற படத்தின் மூலம் தனது திறனை நிரூபித்தார், இத்திரைப்படம் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. அகத்தியனின் இயக்கம் பின்னர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதன்பின்னர், சரணின் இயக்கத்தில் அட்டகாசம், அமர்க்களம், முருகதாஸின் தீனா போன்ற படங்கள் அஜித்தை அல்டிமேட் ஸ்டாராக உயர்த்தியது.

வசூலில் சாதனை
முகவரி, சிட்டிசன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் சிறந்த கேரக்டரில் நடித்து ரசிகரளின் அபிமானத்தைப் பெற்றார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை, போன்ற படங்கள் வசூலில் சாதனை படைத்தன. தற்போது அஜித் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கடலுக்கடியில் பேனர்
இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் 30ஆம் ஆண்டு திரையுலக பயணத்தை முன்னிட்டு புதுச்சேரி அஜித் ரசிகர்கள் கடலில் 100 அடி ஆழத்தில் அஜித்துக்கு பேனர் வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதுச்சேரியில் சில முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நடிகர்களுக்கு பிறந்தநாளின் போது கடலில் பேனர் கட்டி பொதுமக்களிடம் வரவேற்ப்பை பெற்று வருவது வழக்கமாக உள்ளது .அதன்படி புதுச்சேரி ப்ரேஞ்ச் சிட்டி அஜித்குமார் ரசிகர்கள் Scuba diving மூலம் 100அடி கடலுக்கு அடியில் பேனர் வைத்துள்ளனர்.